SBI வங்கியில் கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! EMI அதிகரிக்க வாய்ப்பு!

0
SBI வங்கியில் கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! EMI அதிகரிக்க வாய்ப்பு!
SBI வங்கியில் கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! EMI அதிகரிக்க வாய்ப்பு!
SBI வங்கியில் கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! EMI அதிகரிக்க வாய்ப்பு!

இந்தியாவில் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தன்வசம் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விரிவாக தகவல்களை பற்றி பார்ப்போம்.

வட்டி விகிதம் உயர்வு

இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு வகையான தொழில் துறைகள் பாதிப்படைந்து நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து அத்துடன் சேமிப்பையும் இழந்தனர். அதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அதனால் வங்கிகளில் ஏராளமானோர் தங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க தொடங்கினர். அத்துடன் வங்கிகளிலும் குறைந்த வட்டியில் கடன் தொகையை பெற முடிந்தது.

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 1 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை! இதற்காக தான்?

இந்த நிலையில் அனைத்து வங்கிகளிலும் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஏப்ரல் மாதத்துக்கு பின் வழங்கப்படும் அனைத்து கடன்களும் எம்சிஎல்ஆர் படி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதில் SBI வங்கியில் கடந்த 1ம் தேதி முதல் இபிஎல்ஆர் விகிதம் 6.65 சதவீதமாகவும், ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதம் 6.25 சதவீதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் இபிஎல்ஆர், ஆர்எல்எல்ஆர் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்ச ஊதியத்தில் BSNL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இதனை தற்போது உயர்த்தி உள்ளதாக SBI வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்ததாவது, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 7.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 7% ஆக இருந்தது. இதே போல் இரண்டாண்டு எம்சிஎல்ஆர் 0.1% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 7.30% ஆக உள்ளது. இதனை தொடர்ந்து 3 ஆண்டு எம்சிஎல்ஆர் 7.40% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் பெற்றவர்கள் அதிக EMI-ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!