SBI வங்கி ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – வீட்டில் இருந்தபடியே பின் உருவாக்குவது எப்படி?

0
SBI வங்கி ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - வீட்டில் இருந்தபடியே பின் உருவாக்குவது எப்படி?
SBI வங்கி ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - வீட்டில் இருந்தபடியே பின் உருவாக்குவது எப்படி?
SBI வங்கி ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – வீட்டில் இருந்தபடியே பின் உருவாக்குவது எப்படி?

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி தொடர்பான சேவைகளை செய்து வருகிறது. தற்போது வீட்டில் இருந்தபடி எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பின் உருவாக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

SBI பயனாளர்கள்

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் யுபிஐ ஆப் மூலம் ஆன்லைன் பணபரிவர்த்தனை வளர்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் வங்கிகளிலும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.56900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

அதன்படி தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆன்லைன் முறையில் டெபிட் கார்டு பின் உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் டெபிட் கார்டின் பின்னை வீட்டிலிருந்தபடியே உருவாக்க முடியும். மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தாவது, ஐவிஆர் மூலம் இனி டெபிட் கார்டு பின் அல்லது கட்டணமில்லா எண்ணை வீட்டில் இருந்தபடியே உருவாக்க முடியும். மேலும் இந்த பின்னை உருவாக்கும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 1800 1234 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் இருந்தபடி எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பின் உருவாக்குவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

1. எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பின் ஐ உருவாக்க தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 1234 என்ற எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள வேண்டும்.

2. இதனை தொடர்ந்து ஐவிஆர் விருப்பம் இங்கே தோன்றும்.

3. இதில் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டின் பின்னை உருவாக்க என்ற இரு விருப்பங்கள் இருக்கும்.

4. இப்போது 1 எண்ணை உள்ளிடும்போது பின் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை முக்கிய அறிவிப்பு – உடனே படிங்க!

5. அடுத்ததாக பின்னை உருவாக்க வேண்டிய கார்டின் கடைசி நான்கு எண்களை மட்டும் உள்ளிட வேண்டும்.

6. இப்போது கார்டு எண்ணை உறுதிப்படுத்த எண் “1”ஐ அழுத்த வேண்டும்.

7. அடுத்ததாக தங்களின் பிறந்த தேதியை உள்ளிட்டு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின் வங்கியில் இருந்து பின் எண் அனுப்பப்படும். வங்கியின் பின் செய்தி 24 மணி நேரத்திற்குள் பெறப்படும்.

8. இறுதியாக 24 மணி நேரத்திற்குப் பிறகு அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு சென்று புதிய பின்னை மாற்றலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!