SBI ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

0
SBI ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
SBI ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
SBI ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் டெபிட் கார்டு பயனர்கள் தங்களது கார்டு தொலைந்து விடும் பட்சத்தில் உடனடியாக குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வங்கி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

டெபிட் கார்டு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நீங்கள் SBI வங்கியின் டெபிட் கார்டு பயனராக இருந்தால், குறிப்பிட்ட சில சலுகைகளை வங்கி நிர்வாகம் வழங்குகிறது. அதாவது, SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் டெபிட் கார்டு பயனர்கள் தங்களது கார்டு தொலைந்து விடும் பட்சத்தில் குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக தங்களது கார்டுகளை பிளாக் செய்யலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

ExamsDaily Mobile App Download

அந்த வகையில் வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாடிக்கையாளர்கள் BLOCK<space<கடைசி நான்கு இலக்க எண்ணை டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். இது தவிர பயனர்கள் SBI வங்கியின் கால் சென்டர் எண்ணுக்கும் அழைத்து தொலைந்த டெபிட் கார்டுகளை பிளாக் செய்யும்படி கோரலாம். இந்த செயல்முறையை இன்னும் எளிதாக மேற்கொள்ள, பயனர் ஒருவர் IVR மூலம் தங்களது டெபிட் கார்டுகளை பிளாக் செய்ய முடியும். இதற்கான வழிமுறைகளை பொருத்தளவு,

  • 1800 1234 அல்லது 1800-2100 என்ற எண்ணுக்கு டயல் செய்யவும்.
  • இப்போது கார்டுகளை பிளாக் செய்ய எண் 2ஐ அழுத்தவும்.
  • இதில் உங்கள் அக்கவுண்ட் எண்ணின் கடைசி 5 இலக்கங்கள் கேட்கப்படும்.
  • அதை கொடுத்தால் உங்கள் கார்டு பிளாக் செய்யப்படும்.
  • இந்த செயல்முறை முடிந்ததும் வெரிஃபிகேஷனுக்காக SMS அனுப்பப்படும்.

இதனை தொடர்ந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு அப்ளை செய்ய பயனர்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் ஆப்களை பயன்படுத்தலாம். இந்த செயல்முறையில் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

MECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,90,000/- வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

முதலில் இணையதளத்தை பயன்படுத்தி டெபிட் கார்டுக்கு அப்ளை செய்ய;

  • SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது sbicard.com என்ற
  • இணைப்பை தேர்வு செய்யவும்.
  • இதில், request என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • அடுத்ததாக reissues/replace என்பதை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து கார்டு எண்ணை கிளிக் செய்து, submit கொடுக்கவும்.

அடுத்து மொபைல் ஆப்பை பயன்படுத்தி டெபிட் கார்டுக்கு அப்ளை செய்ய;

  • முதலில் sbicard என்ற மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • செயலியில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
  • பிறகு menu ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • இதில், service request என்பதை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து reissues/replace என்பதை தேர்வு செய்து கார்டு எண்ணை கிளிக் செய்யவும்.
  • இறுதியாக submit கொடுக்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!