Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சமீபகாலமாக ஆன்லைன் மோசடி கும்பல்களின் அட்ராசிட்டி அதிகரித்துவிட்டது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள், மோசடியில் இருந்த பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டங்களும், காப்பீடு திட்டங்களும் மக்களை பெருமளவில் கவர்ந்து விட்டன. பலரும் இந்த திட்டங்களில் சேமிப்பை தொடங்க, முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். நீண்ட கால முதலீடுகளுக்கு போஸ்ட் ஆபீஸ் சிறந்த இடமாக விளங்குகிறது. சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அரசு, ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை, EPFO என பல பெயர்களில் வேடமிட்டு ஆன்லைன் மோசடி கும்பல்கள் பணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். ஆதார் கார்டு காலாவதி, பான் நம்பர் மாற்ற வேண்டும் என மெசேஜ், லிங்க் மூலம் நன்கு படித்தவர்களையும் எளிதாக ஏமாற்றி பணத்தை சுருட்டுகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் சில தினங்களுக்கு முன்பு, SBI வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் அறிவிப்பை வெளியிட்டது. இந்த வரிசையில் தற்போது இந்திய தபால் துறை பெயரிலும் மோசடி கும்பல்கள் கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டன. போஸ்ட் ஆபீஸ் பெயரில் கிளம்பியுள்ள மோசடி கும்பல்கள் குறித்து தபால் துறை அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தபால் துறை சில சர்வே, குய்ஸ் போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அரசாங்கம் மானியத் தொகை வழங்கி வருவதாகவும், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும், மெசேஜ் மற்றும் இமெயில் வாயிலாக தகவல் பரவி வருகிறது.

TNPSC முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

இதுபோன்ற வதந்திகளை யாருக்கும் பரப்ப வேண்டாம். மேலும் போலி தகவலை நம்பி அடையாளம் தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வோர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது. தபால் துறை தரப்பில், இந்த URLகள்/இணைப்புகள்/இணையதளங்கள் அகற்றப்படுவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும், மோசடி மெசேஜ்களை நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம். அப்படி பணத்தை இழக்க நேரிட்டால் அதற்கு இந்திய போஸ்ட் ஆபீஸ் பொறுப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!