RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தற்போது RRB Group D Phase V தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு நகரம் போன்றவற்றை தேர்வர்கள் தற்போது அறிந்து கொள்ளமுடியும். இதற்கான இணைய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RRB Group D:

RRB தேர்வு கணித வழி தேர்வாக பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. தற்போது RRB தேர்வின் 5ம் கட்டமான இறுதிக்கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 5ம் கட்ட தேர்வானது 06.10.2022 மற்றும் 11.10.2022 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில், நிலவும் கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு நகரம், குறித்த விவரங்கள் செப்டம்பர் 27ம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. தேர்வுக்கான விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவை தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி அனுமதி அளிக்கப்படும். தேர்வர்களின் ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் ஆவணம் தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் சோதனை செய்யப்படும்.

முழு அடைப்பு போரட்டம் (பந்த்) – தனியார் பேருந்துகள் ரத்து! வெறிசோடிய சாலைகள்!

Exams Daily Mobile App Download

இதனால் தேர்வர்கள் அசல் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். மேலும், போலியாக வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் என்றும், RRB தேர்வுகள் கணினி அடிப்படையில் நடத்தி அதில் பெறும் மதிப்பெண்களை வைத்தே ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், RRB தேர்வு குறித்த தகவல்களுக்கு RRB-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை மட்டுமே பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notice

Exam Date & City – Login Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!