Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் செல்லுபடியாகும் சூப்பரான திட்டங்கள்!

0
TNPSC Online Classes [table id=1078 /]
TNPSC Online Classes [table id=1078 /]
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் செல்லுபடியாகும் சூப்பரான திட்டங்கள்!

ஜியோ ஒவ்வொரு வரம்பிலும் திட்டங்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் பல திட்டங்கள் உள்ளன. இந்த 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் விலை, நன்மைகள் ஆகியன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூப்பரான திட்டங்கள்:

இந்த ஆண்டு ஜனவரியில், இந்தியாவின் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நாட்டின் தொலைத்தொடர்புக் கொள்கைகளில் ஒரு திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதாவது இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாள் அல்லது ஒரு மாத திட்டங்களை வழங்குவதை கட்டாயமாக்கியது. இந்த நடவடிக்கையானது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் சலுகைகளில் 30 நாள் பேக்குகளை சேர்ப்பதை கட்டாயமாக்கியது அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு வகையிலும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. வெவ்வேறு விலைகள், வெவ்வேறு செல்லுபடியாகும் தன்மை மற்றும் பல்வேறு நன்மைகள் போன்றவற்றுடன் பயனர்கள் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

ஜியோ ரூ.181 work from home plan : இது ஒரு கூடுதல் திட்டம். இது எந்த வகையான அழைப்பு அல்லது உள்ளடக்க சேவைகளையும் வழங்காது. வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டமாக இதை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இது 30GB டேட்டாவை வழங்குகிறது. அதிகளவு டேட்டாவை வழங்கும், ஒரு மாத வேலிடிட்டி கொண்ட மலிவான திட்டம் இது என்றும் கூறலாம்.

ஜியோ ரூ.241 திட்டம் : இதுவும் ஒரு வகை வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கான திட்டமாகும். ரூ.241 க்கு 40 GB டேட்டா பலன்களை இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் அனுபவிக்கலாம். இதுவும் ஒரு மாதம் செல்லுபடியாகும் திட்டமாகும்.

ஜியோ ரூ.296 திட்டம்: இது பயனர்களுக்கு 25 GB டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் தவிர, நீங்கள் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் பெறுவீர்கள். இதில் Jio Cinema, Jio Security, Jiocloud ஆகியவை அடங்கும்.

ஜியோ ரூ.259 நாட்காட்டி மாதத் திட்டம்: இதில் நீங்கள் 30 நாட்களுக்கு பதிலாக, 31 நாட்களுக்கு பலன்களைப் பெறலாம். இந்த திட்டத்தில் தினசரி 1.5 GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு மற்றும் Jio Cinema, Jio Security, Jiocloud போன்ற ஜியோ உள்ளடக்கத்திற்கான அணுகலைப் பெறுவீர்கள்.

ஜியோ ரூ.301 திட்டம் : கூடுதல் டேட்டா வேண்டும் என்றால் ரூ.301 விலையில் 50 GB டேட்டா திட்டத்தை ஜியோ கொண்டுள்ளது. இந்த திட்டமும் 30 நாட்கள் செல்லுபடியாகும் என்பது கூடுதல் சிறப்பு.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!