அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இந்த அப்டேட் செய்வது அவசியம்!

0

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இந்த அப்டேட் செய்வது அவசியம்!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி உங்கள் மொபைல் எண் மாறியிருந்தால், உடனடியாக ரேஷன் கார்டில் அப்டேட் செய்யவும். எனவே ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை எப்படி எளிதாக அப்டேட் செய்யலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி:

ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த கார்டுகள் மூலமாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மலிவான விலையில் ரேஷன் பொருட்களை பெறுகின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் பல சலுகைகளை குடிமக்கள் பெற முடியும். இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, முகவரி, பெயர், வயது மற்றும் மொபைல் எண் போன்றவற்றின் தகவல்கள் விண்ணப்பதாரரிடம் இருந்து பெறப்படுகின்றன. சில சமயங்களில் ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது எண் மாறியிருந்தாலோ அல்லது கார்டு புதுப்பிக்கப்படாவிட்டாலோ, ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

எனவே மொபைல் எண்ணை ரேஷன் அட்டையில் அப்டேட் செய்வது அவசியமாகும். மொபைல் எண் மூலமாகவே ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் sms மூலம் அனுப்பப்படுகிறது. இதுபோன்ற சூழலில் உங்களது ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் உணவுத் துறைக்கு தனி போர்டல் உள்ளது. அதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் வீட்டிலிருந்தபடியே செய்யப்படுகின்றன.

1.  1967 என்கிற உதவி எண்ணுக்கு அழைத்து கேட்டால், செல்பேசி எண்ணை மாற்றுவது தொடர்பான விவரங்களை தெரிவிப்பார்கள்.

2. அதேபோல், ஒவ்வொரு தாலுக்கா அலுவலகத்திலும், தனியாக ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்றும் செல்பேசி எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

3.அங்கு செல்வதற்கு முன், குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தலைவர் தங்களது ஆதார் எண் மற்றும், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4.அங்குள்ள அதிகாரியிடம், மொபைல் எண் மாற்றுவதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து, புதிய எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

5.புதிய எண் மாற்றம் செய்த உடன், மாற்றப்பட்டதற்கான தகவல் உங்களுக்கு SMS வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here