ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்தால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும்!

0
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இதை செய்தால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும்!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இதை செய்தால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும்!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்தால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும்!

இந்தியாவில் ரேஷன் கார்டு போலவே ஆதார் அட்டையும் மற்றொரு முக்கியமான ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசு சலுகைகள், மானியங்கள், வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல் செய்தல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களிலும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியமான ஓன்று ஆகும்.

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைப்பு:

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் ரேஷன் கார்டு மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வருகையால், வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய மக்களுக்கு இன்று வரை ரேஷன் அட்டை வாயிலாக இலவசமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதையடுத்து பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஆவணங்களுக்கு கூடுதலாக, ரேஷன் கார்டு அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகவும் செயல்படுகிறது.

இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் அனைத்து பொருட்களையும் பெற தகுதியற்ற நபர்கள் அதை வாங்கிச் செல்வதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. அதை தடுக்கும் நோக்கில் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது கட்டாயம். இதை செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exams Daily Mobile App Download
ஆன்லைன் முறையில் ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்கும் வழிமுறை:
 • அதிகாரப்பூர்வ ஆதார் சீடிங் அப்ளிகேஷன் (Aadhaar seeding application) தளத்திற்குச் சென்று “இப்போது தொடங்கு” (Start Now) என்பதைக் கிளிக் செய்யவும்.
 • மாவட்டம், மாநிலம் உள்பட உங்கள் முழு முகவரியை உள்ளிடவும்
  வழங்கப்பட்ட விருப்பங்களில் இருந்து, “ரேஷன் கார்டு” என்பதை தேர்ந்தெடுக்கவும்
 • ‘ரேஷன் அட்டை’ (Ration Card) என்ற திட்டத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
  உங்கள் ரேஷன் அட்டை எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணை உள்ளிடவும்
 • படிவத்தில் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு OTP (ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்) அனுப்பப்படும்.
 • OTP-ஐ உள்ளிடவும், அதன் பிறகு, விண்ணப்பித்தல் வெற்றிகரமாக இருந்தது என்பதை திரை அறிவிப்பு உங்களுக்குத் தெரிவிக்கும்.
 • உங்கள் விண்ணப்பம் உடனடியாக சரிபார்க்கப்படும். வழங்கப்பட்ட விவரங்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் ஆதார் அட்டை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பைப் பெறுவீர்கள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வரின் முடிவு என்ன?

ஆஃப்லைன் முறையில் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் வழிமுறைகள்:
 • அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளின் நகல் மற்றும் உங்கள் ரேஷன் அட்டையின் புகைப்பட நகலையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
 • உங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதார் அட்டையை இணைக்கவில்லை என்றால், உங்கள் வங்கிக் பாஸ்புக்கின் நகலைப் பெறவும்.
 • குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் எடுத்து, இந்த ஆவணங்களை ரேஷன் அலுவலகம் அல்லது பொது விநியோக அமைப்பு (PDS)/ரேஷன் கடையில் சமர்ப்பிக்கவும்.
 • ஆதார் தரவுத்தளத்துடன் நீங்கள் கொடுத்த தகவல்களை சரிபார்க்க, உங்கள் கைரேகை அங்கீகரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர் கேட்கலாம்.
 • தொடர்ந்து ஆவணங்கள் சம்பந்தப்பட்ட துறையை அடைந்ததும், SMS அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
 • அலுவலர்கள் உங்கள் ஆவணங்களை சரிபார்த்ததும், ரேஷன் கார்டு வெற்றிகரமாக ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.
 • இது சம்பந்தமான அறிவிப்பு உங்களுக்கு மின்னஞ்சல் / SMS மூலமாக கிடைக்கும்.

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here