ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ரயில் டிக்கெட் கிடைப்பதால் பெரும்பாலும் மக்கள் ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்த நிலையில் ரயில் டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு மேற்கொண்டவர்களுக்கு ரயில் நிலையத்தை மாற்றும் வசதிகள் உள்ளது. இதையடுத்து ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

IRCTCயின் புதிய வசதி

இந்தியாவில் நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ளவும் அத்துடன் செளகாரியமாக பயணம் மேற்கொள்ளவும் ரயில் போக்குவரத்து உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ரயில் நிலையத்தில் கொரோனா கால கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து தற்போது பயணிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தற்போது ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்ய IRCTC இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் முன்பதிவு செய்தவர்களுக்கு தங்களின் ரயில் நிலையத்தை மாற்றி கொள்வதற்கான வசதி கடந்த 2019ம் ஆண்டு மே 1ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாக அத்துடன் பயணிகள் விவரம் குறித்த ‘சார்ட்’ தயாராகுவதற்கு முன்பாக இந்த வசதிகளை பெற முடியும். இதனை பெற நீங்கள் முன்பதிவு செய்த IRCTC இணையதளம் அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த வசதிகளை பெற முடியும்.

Apprentices பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

மேலும் இந்த வசதி பொது மற்றும் தாக்கல் என இருவகையான டிக்கெட்டுக்கும் உண்டு.  இப்போது இந்த வசதியை ரயில் நிலையத்தில் டிக்கெட் பெற்றவர்களும் இந்த வசதியையும் பெற முடியும்.  இதற்கான www.irctc.co.in என்ற இணையதளத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  அதன்படி இந்த வசதியை பெற விரும்பும் நபர்கள் IRCTC இணையதளத்திற்கு சென்று “கவுண்டர் டிக்கெட் போர்டிங் பாயிண்ட் சேஞ்ச்” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.  இதில் நீங்கள் புக்கிங் செய்த மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.  இப்போது OTP எண் அனுப்பப்படும்.  இதை உள்ளிட்டு டிக்கெட்டில் குறிப்பிட்ட புறப்படும் இடத்தை மாற்றிக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here