Post Officeல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வாட்ஸ்அப் மூலமாக திட்டங்கள்!
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வாட்ஸ்அப் செயலி மூலமாகவே வாடிக்கையாளர்கள் எளிமையாக வங்கி பரிவர்த்தனைகளை செய்யும்படியான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி:
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி நிதிச் சேவை மற்றும் வங்கி சேவைகளை திறம்பட செய்து கொண்டிருக்கிறது. அனைத்து வங்கிகளுமே டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளை தான் செய்து வருகிறது. அதே போல இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியும் வாட்ஸ்அப் மூலமாகவே வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவைகளை செய்து கொள்ளலாம் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ்அப் மூலமாகவே புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, வங்கியில் எவ்வளவு இருப்புத் தொகை இருக்கிறது, பாஸ்வேர்டை மாற்றுவது எப்படி என அனைத்தையும் செய்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளை எளிமையாக்க கூடிய விரைவில் இந்தியா போஸ்ட் நிறுவனம், வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கூட்டணி சேர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைக்கு சில அடிப்படை வசதிகளை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கும் எனவும், பிறகு படிப்படியாக அனைத்து சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆரம்ப காலத்தில் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே வாட்ஸ் அப் செயலி மூலமாக வங்கிகளின் பரிவர்த்தனைகளை செய்ய முடியும் எனவும், பான் நம்பர் அப்டேட் செய்வது, ஆதார் மூலம் பண பரிவர்த்தனை செய்வது ஆகிய வசதிகளை செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்? கல்வி அமைச்சகம் விளக்கம்!
பின்பு, படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என இந்தியா போஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும் பார்சல் புக்கிங், சம்பள கணக்கு, சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு ஆகியவற்றையும் கூடிய விரைவில் வாட்ஸ் அப் செயலி மூலமாகவே செய்துகொள்ளும் வசதியை இந்தியா போஸ்ட் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கூடுதலாக மக்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.