PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்!

0
PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்!
PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்!
PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்!

வங்கிகளில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதனால் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி பாசிட்டிவ் பேமண்ட் முறையை இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது பாசிட்டிவ் பேமண்ட் முறையை பற்றி விரிவாக பார்க்கலாம்.

புதிய விதிமுறை

இந்தியாவில் அனைத்து வங்கிகளிலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது, அத்துடன் வங்கிகளில் பணம் செலுத்துவது உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பல்வேறு மோசடிகள் ஏற்படுகிறது. அதனால் முறைகேடுகளை தவிர்க்க வங்கிகளில் பல்வேறு வகையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பிஓஐ, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, பிஓபி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளில் காசோலைகள் செலுத்துவதில் பாசிட்டிவ் பேமண்ட் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த பாசிட்டிவ் பேமண்ட் முறை என்பது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள காசோலைக்கு வாடிக்கையாளர்கள் கணக்கு எண், காசோலை எண், காசோலைத் தொகை, ஆல்பா காசோலை, காசோலை தேதி மற்றும் பயனாளியின் பெயரை வழங்க வேண்டும். இந்த தொகை ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுகிறது. இதில் எஸ்பிஐ வங்கியில் 50,000 ரூபாய்க்கு மேல் காசோலை செலுத்துவதற்கு இம்முறை பின்பற்றப்படுகிறது. பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு பாசிட்டிவ் பேமண்ட் முறை செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்!

இந்த வரிசையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இணைந்துள்ளது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, வாடிக்கையாளர்கள் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளை வங்கி கிளை அல்லது டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கு பிபிஎஸ் உறுதிபடுத்துதலை கட்டாயமாக்கியுள்ளது. இதனை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் 1800-103-2222 அல்லது 1800-180-2222 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது https://www.pnbindia.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!