PM Kisan திட்ட பயனாளிகளின் கவனத்திற்கு – ஜூலை 31ஆம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்!

0
PM Kisan திட்ட பயனாளிகளின் கவனத்திற்கு - ஜூலை 31ஆம் தேதிக்குள் 'இது' கட்டாயம்!
PM Kisan திட்ட பயனாளிகளின் கவனத்திற்கு - ஜூலை 31ஆம் தேதிக்குள் 'இது' கட்டாயம்!
PM Kisan திட்ட பயனாளிகளின் கவனத்திற்கு – ஜூலை 31ஆம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்!

மத்திய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.6000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 11வது தவணை தொகை கடந்த மே 31ம் தேதி அன்று விடுவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12வது தவணையை பெற இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் கட்டாயமாக சில வழிமுறைகளை செய்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

பயனாளிகள் கவனத்திற்கு

இந்தியாவில் விவசாயிகளின் வருவாய் மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டம் மத்திய அரசால் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஒரு வருடத்திற்கு ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 31ம் தேதி அன்று 11வது தவணை தொகை விடுவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சில பயனாளிகள் கணக்கில் 11வது தவணை தொகை கிடைக்கவில்லை. இதற்கு e-KYC, ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவை தவறாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் தங்களின் e-KYC விவரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும். அதன்படி இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் e-KYC ஐ அப்டேட் செய்வதற்காக ஜூலை மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.’

வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் pmkisan.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

2. இதையடுத்து ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ என்ற பிரிவில் ‘eKYC’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. இதனை தொடர்ந்து ‘OTP அடிப்படையிலான eKYC’ என்ற பிரிவின் கீழ் உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

4. அடுத்ததாக ‘தேடல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

5. அதனை தொடர்ந்து ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து ‘OTP’ எண்ணை உள்ளிட வேண்டும்.

6. இறுதியாக உங்களின் விபரங்களை சரிபார்த்தவுடன் “eKYC” சரி செய்து முடிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here