PM Kisan பயனாளிகள் கவனத்திற்கு – கடைசி தேதி நீட்டிப்பு!

0
PM Kisan பயனாளிகள் கவனத்திற்கு - கடைசி தேதி நீட்டிப்பு!
PM Kisan பயனாளிகள் கவனத்திற்கு - கடைசி தேதி நீட்டிப்பு!
PM Kisan பயனாளிகள் கவனத்திற்கு – கடைசி தேதி நீட்டிப்பு!

மோடி அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்கள் எதிர்கால தவணைத் தொகைகள் கிடைப்பதை உறுதி செய்ய kyc செயல்முறையை முடிக்க வேண்டும். இந்நிலையில் PM Kisan Yojana க்கான eKYC கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

PM Kisan Yojana eKYC:

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. மேலும் 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் என்ற வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பெருங்குடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரையில் இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த மே 31 ஆம் தேதி 11 வது தவணை 21000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இது தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தொடர்ந்து பணம் பெறுவதற்கு eKYC முடிக்க வேண்டும். eKYC முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், PM கிசான் பயனாளிகள் இப்போது ஆகஸ்ட் 31 வரை தங்கள் eKYC ஐ முடிக்க முடியும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “அனைத்து PMKISAN பயனாளிகளுக்கும் eKYC இன் காலக்கெடு 31 ஆகஸ்ட் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று PM-Kisan Samman Nidhi அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. இதுவரை, ஜூலை 31, மே 31 மற்றும் மார்ச் 31 என 3 முறை காலக்கெடுவை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PM KISAN பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC, PM KISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்காக அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள உணவுகளை தானம் கொடுத்த கதிர் முல்லை, பார்சலால் வீட்டில் மாட்டிக் கொண்ட மூர்த்தி – இன்றைய எபிசோட்!

ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி:

  • ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.
  • அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC ஐ தேர்வு செய்யவும்.
  • புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.
  • இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.
  • OTP பதிவிட்டு Submit கொடுக்கவும்.
  • இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!