Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – அதிக லாபம் பெற வழிமுறைகள்!

0
Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - அதிக லாபம் பெற வழிமுறைகள்!
Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - அதிக லாபம் பெற வழிமுறைகள்!

Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – அதிக லாபம் பெற வழிமுறைகள்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். அதில் குறிப்பாக பங்கு சந்தை, தங்கம் உள்ளிட்டவற்றில் செலுத்தத் தொடங்கினர். தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை அதிகளவு செலுத்தி வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. அத்துடன் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

அதனால் சாதாரண மக்கள் கூட அதிகளவு இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறுகின்றனர். தற்போது இந்த சேமிப்பு திட்டத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தில் ரூ.500 முதல் 1,50,000 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. அத்துடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்த திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு வரி சலுகையும் கிடைக்கிறது. இதில் சேமிப்பு கணக்கை தொடங்க விரும்புவர்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

இந்த திட்டத்தில் மைனர் அல்லது நல்ல மனநிலை இல்லாதவர்கள் சேமிக்க முடிவு செய்தால் அவர்களின் பாதுகாவலர் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் மாதம் ரூ.4500 செலுத்தினால் முதிர்வு காலம் முடியும் போது அதாவது 20 ஆண்டுகள் முடிவில் ரூ.20 லட்சம் வரை சேமிப்பு தொகையை பெற முடியும். சேமிப்பு கணக்கை முடிக்கும் போது அதற்கான படிவம் மற்றும் சேமிப்பு புத்தகத்தை சேர்த்து தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற விரும்புவர்கள் indiapost.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!