PF பெறும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பென்ஷன் நம்பர் அவசியம்! முழு விபரம் இதோ!

0
PF பெறும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பென்ஷன் நம்பர் அவசியம்! முழு விபரம் இதோ!
PF பெறும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பென்ஷன் நம்பர் அவசியம்! முழு விபரம் இதோ!
PF பெறும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பென்ஷன் நம்பர் அவசியம்! முழு விபரம் இதோ!

பென்ஷன் தொகை பெறுபவர்களுக்கு முக்கியமான பென்ஷன் நம்பர் தொலைந்து விட்டால் அதை எவ்வாறு மீண்டும் அறிந்து கொள்வது என்பது பற்றிய தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பென்ஷன் நம்பர்:

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களின் பணிக்காலம் முடிந்த பின்னர் அவர்களின் பணிக்கும், பெற்ற ஊதியத்திற்கும் ஏற்றார் போல் ஓய்வூதியம் பெறுவார்கள். தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பென்ஷன்தாரர்களுக்கு தனியாக நம்பர் அளிக்கப்படுகிறது. இந்த எண்ணிற்கு Pension Payment Order (PPO) என்று பெயர். இந்த எண்ணை அடிப்படியாக வைத்து தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த எண் இல்லாத பட்சத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாது.

மாநிலம் முழுவதும் இனி இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!

ஞாபக மறதியாக இந்த நம்பரை மறந்து விட்டாலோ அல்லது தொலைத்து விட்டாலோ பென்ஷன்தாரர்கள் கவலையடைய தேவையில்லை. தற்போதைய நவீன உலகத்தில் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் முறையிலும் அரசு வழங்கி வருகிறது. இதனால் பென்ஷன்தாரர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் இந்த தனித்துவ Pension Payment Order நம்பரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

  • முதலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், ‘Online Services’ பிரிவில் ‘Pensioners Portal’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்பொழுது ஒரு புதிய பக்கத்தில் உள்ள ‘Know Your PPO No’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு பென்சன் வரும் வங்கி எண்ணை பதிவு செய்ய வேண்டும் அல்லது உங்களது PF நம்பரை பதிவு செய்தும் அறிந்து கொள்ளலாம்.
  • அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு ‘submit’ கொடுக்க வேண்டும்.
  • இப்பொழுது இறுதியாக உங்கள் PPO நம்பர் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!