PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – UAN எண்ணை மறந்துவிட்டால், பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம்!

0
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - UAN எண்ணை மறந்துவிட்டால், பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம்!
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - UAN எண்ணை மறந்துவிட்டால், பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம்!
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – UAN எண்ணை மறந்துவிட்டால், பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம்!

பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம், மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக உள்ளது. PF உறுப்பினரின் UAN எண்ணை மறந்துவிட்டால், பிஎஃப் பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

EPF என்று அழைக்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆனது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்களுக்கான சேவிங்ஸ் அக்கவுண்ட் ஆகும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பணியாளரும் மற்றும் முதலாளியும் தங்கள் அடிப்படை வருமானத்தில் 12% ஐ இந்த பிஎஃப் அக்கவுண்ட்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பாக வழங்குகிறார்கள். பொதுவாக UAN மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஒரு சில சமயத்தில் UAN மறந்துவிட்டால், பிஎஃப் எண், ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தி UAN எண்ணை கண்டறியலாம்

Exams Daily Mobile App Download

1. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் உறுப்பினர்கள் சேவை வழங்கும் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. மேலே குறிப்பிட்டுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வலது பக்கம் உள்ள Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. Know Your UAN என்ற பக்கத்திற்கு சென்ற உடன் பிஎஃப் எண், ஆதார் எண் அல்லது பான் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், captcha போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

Stenographer பணிக்கு ரூ.7,700/- ஊக்கத்தொகை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

4. பின்னர் Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. அடுத்த பக்கத்தில் I Agree என்பதை தேர்வு செய்து மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

6. OTP எண்ணை பதிவிட்டு ‘சரிபார்க்கவும் (Validate)’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் UAN மற்றும் அதற்கான கடவுச் சொல்லும் எஸ்எம்எஸ் மூலம் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் பேலன்ஸ் என்ன என்பது குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும்.

SMS வழியாக பிஎஃப் பேலன்ஸை செக் செய்வது எப்படி:

  • PF அக்கவுண்ட் பேலன்ஸை SMS வழியாக செக் செய்ய 7738299899 என்ற எண்ணிற்கு “EPFOHO UAN ENG” என்கிற டெக்ஸ்ட்-ஐ அனுப்பவும்.
  • உங்களின் கடைசி PF பங்களிப்பு மற்றும் மொத்த பிஎஃப் பேலன்ஸ் விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
  • இந்த செயல்முறை உங்கள் யுஏஎன் (UAN) ஐ வழங்காமலோ அல்லது இணைய அணுகல் இல்லாமலோ கூட உங்கள் பிஎஃப் பேலன்ஸை செக் செய்ய அனுமதிக்கும்.
  • இருப்பினும், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மட்டுமே SMS அனுப்பப்படுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!