பென்ஷன்தாரர்களின் கவனத்திற்கு.. பணம் எடுப்பதற்கான விதிமுறையில் மாற்றம் – முக்கிய தகவல் உள்ளே!

0
பென்ஷன்தாரர்களின் கவனத்திற்கு.. பணம் எடுப்பதற்கான விதிமுறையில் மாற்றம் - முக்கிய தகவல் உள்ளே!
பென்ஷன்தாரர்களின் கவனத்திற்கு.. பணம் எடுப்பதற்கான விதிமுறையில் மாற்றம் – முக்கிய தகவல் உள்ளே!

தேசிய பென்ஷன் திட்டம் (NPS) முன்னதாக அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டத்தில் பணம் எடுக்கும் விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தேசிய பென்ஷன் திட்டம்

இந்தியாவில் பொதுமக்கள் தங்களின் முதுமை காலத்தில் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2004ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தேசிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அதாவது தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக ஓய்வூதிய பலன்களை சிறப்பாக கையாளலாம். இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் வரை இணைந்து கொள்ளலாம். மேலும் இதில் 2 அடுக்குகள் உள்ளது. இதன் முதலாவது அடுக்கில் நீங்கள் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தின் முடிவில் உங்களுக்கு 60% பணம் திரும்ப கிடைக்கும். இதன் மீதமுள்ள தொகையானது மாதந்தோறும் ஓய்வூதியமாக கிடைக்கும். இதில் உங்களுக்கு வரி சலுகைகளும் கிடைக்கிறது. இதன் 2-வது அடுக்கில் நீங்கள் முதலீடு செய்தால் எந்த நேரத்திலும் முதலீடு தொகையை பெற முடியும். ஆனால் இதில் வரி சலுகைகளை பெற முடியாது.

மதுரை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிரடியாக வரவிருக்கும் சூப்பர் திட்டம் – தயார் நிலையில் அறிக்கை!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது இத்திட்டத்தில் பணம் எடுப்பதற்கான விதிமுறையில் PFRDA மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது நீங்கள் பென்ஷன் நிதியில் உள்ள பணத்தை எடுப்பதற்கு கோரிக்கை வைத்தால், அந்த கோரிக்கை 4 நாட்களில் செயல்படுத்தப்படும். ஆனால் தற்போது இந்த கால வரம்பை PFRDA குறைத்துள்ளது. அதாவது கோரிக்கை வைக்கப்பட்ட 2 நாட்களில் செயல்படுத்தப்படும் என PFRDA விதிமுறையை மாற்றியுள்ள்ளது. இதனால் பென்சன் நிதியை எடுப்பதில் காலத்தை மிச்சப்படுத்துவதுடன் நிதியும் விரைவில் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!