WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – 23 லட்ச கணக்குகள் முடக்கம்!

0
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு - 23 லட்ச கணக்குகள் முடக்கம்!
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு - 23 லட்ச கணக்குகள் முடக்கம்!
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – 23 லட்ச கணக்குகள் முடக்கம்!

இந்திய நாட்டில் வாட்ஸ் ஆப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி லட்சக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு செயலி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

WhatsApp

உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் WhatsApp செயலி பயனாளர்களின் தரவுகளை பாதுகாப்பாக வைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இச்செயலியை பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் WhatsApp செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது வசதிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதையடுத்து சமூக ஊடகங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு சட்டத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை பற்றி தவறுதலாக தகவல்களை பரப்புவர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் இதனால் இந்திய மக்களிடையே சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் சமூக ஊடக நிறுவனங்கள் அறிக்கையை தாக்கல் செய்வது வழக்கமாகும். அந்த வகையில் ‘வாட்ஸ் ஆப்’ தகவல் தொடர்பு செயலி நிறுவனம் இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், நாட்டில் குறைதீர்ப்பு குழுவிற்கு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 22 லட்சம் பேரின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடந்த ஜூலையில் 23.87 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் புகார் அளிக்கப்படுவதற்கு முன்பாக 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!