திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முன்பதிவு தொடக்கம்!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முன்பதிவு தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செப்டம்பர் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான்:

நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இந்த மாதம் முழுக்க கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க சுவாமி தரிசனம் செய்வதற்கான சில சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.. தற்போது கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அனைத்து கட்டண சேவைகளும் துவங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதாவது செப்டம்பர் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான டிக்கெட் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகளையும் பக்தர்கள் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை அஷ்டதள பாத பத்மாராதனை போன்றவைகளுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான முன்பதிவு டிக்கெட்களையும் நாளை காலை 10 மணி முதல் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்த பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த பக்தர்கள் மட்டும் உரிய பணத்தை செலுத்தி ஆன்லைன் மூலமாக டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here