தமிழகத்தில் பட்டதாரி, இளநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு – பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!

0

தமிழகத்தில் பட்டதாரி, இளநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு – பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் பட்டதாரி மற்றும் இளநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான தேதிகள் உள்ளிட்ட விபரங்களை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பொதுமாறுதல் கலந்தாய்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் விடுமுறைகளும் முடிவுக்கு வர அடுத்த கல்வியாண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் 13000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் பட்டதாரி மற்றும் இளநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் கொரோனா பரவல்!

அதன்படி ஜூலை 7ம் தேதி இளநிலை, ஜூலை 8ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான முன்னுரிமை பட்டியல் குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விபரங்களை அடிப்படியாக கொண்டு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்காக முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. அதே கல்வியாண்டில் LKG, UKG மாறுதல் மற்றும் உபரி ஆசிரியர் பணி நிரவல் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பித்து இருந்தால் பெயர்கள் நீக்கம் செய்யப்படாது.

அதுமட்டுமின்றி எமிஸ் தளத்தில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்ட்ட பின்னர் அதில் திருத்தம் எந்த வகையிலும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 13000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு பின்னர் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here