வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் கவனத்திற்கு – அடுத்து என்ன செய்ய வேண்டும்?

0
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் கவனத்திற்கு - அடுத்து என்ன செய்ய வேண்டும்?
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் கவனத்திற்கு - அடுத்து என்ன செய்ய வேண்டும்?
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் கவனத்திற்கு – அடுத்து என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்னமும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், தாக்கல் செய்யத் தவறவிட்டவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட தேதி தான் இறுதி தேதி என்று வருமான வரித் துறையால் அறிவிக்கப்படும். கடந்த நிதியாண்டுக்கான (FY 2021-22 AY 2022-23 ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022) வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 2022 ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக மக்களின் சிரமங்களைத் தவிர்க்க, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது.

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு 7 % வரை வட்டி – முழு விவரங்கள் இதோ!

ஆனால், இந்த முறை கால நீட்டிப்பு செய்யப்படவில்லை.வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 தான் என்று அறிவித்துவிட்டன. கடைசி நாள் நேற்று முடிந்த நிலையில் பலரும் எதிர்பார்த்தபடி நீட்டிப்பு அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.மேலும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் , இந்த ஆண்டு (2022) டிசம்பர் 31ஆம் தேதி வரை கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இருப்பினும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234F இன் படி தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் விதிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதன் அடிப்படையில், ITR தாக்கல் செய்வதை தாமதம் செய்தால், ரூ. 5,000 வரை Late filing fee விதிக்கப்படும். இருப்பினும், அனைவருக்கும் இது பொருந்தாது. குறைவான தொகையை வரியாக செலுத்துவோருக்கு, அதாவது வருமான வரி கணக்கிடப்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாகாமல் இருந்தால், தாமதமாக ITR தாக்கல் செய்யும் கட்டணமாக ரூ.1,000 விதிக்கப்படும். மேலும், நீங்கள் ITR தாக்கல் செய்யும் முன்பே, இந்த லேட் ஃபைலிங் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இழப்புகள் என்னென்ன:

நிலுவைத் தேதியை தவறவிட்டவர்கள், உங்கள் சொத்து / பங்குகள் / மூலதனச் சொத்துகளின் விற்பனையில் ஏற்படும் இழப்புகள் போன்ற (வீட்டுச் சொத்தின் இழப்பு தவிர) ஏதேனும் இருந்தால் அவற்றைத் தொடர அனுமதிக்கப்படாது என்று நிதியியல் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

ஆனால், இதுபோன்ற பங்குகள் அல்லது சொத்துக்கள் விற்பனையில் ஏற்படும் இழப்புகளை, நீங்கள் 8 ஆண்டுகள் வரை தொடர அல்லது நீட்டித்துக் கொள்ள இயலும்.

அதாவது, எதிர்காலத்தில், விற்பனை அல்லது பங்குகள் அல்லது உறுதிப்பத்திரங்கள் விற்பனையில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் போது, அதை நீங்கள் முன் நிதியாண்டில் பெற்ற நஷ்டத்திலிருந்து கழித்துவிட்டு, நிகர லாபத்துக்கு மட்டுமே வரிப் பிடித்தம் செய்யப்படும்.

ஒரு வேளை, இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஒருவர் தனது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார் என்றால், இந்தச் சலுகை கிடைக்காது. அதாவது அவரது நஷ்டம் அடுத்த நிதியாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட இயலாது. லாபம் ஈட்டும்போது மொத்த லாபத் தொகைக்கும் அவர் வரி கட்டியாக வேண்டும்.

இதே நிலைதான், ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் ஒருவர், அசையாச் சொத்துகளை விற்கும்போது அடையும் நஷ்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட மாட்டாத

ஒரு வேளை, நீங்கள் தாமதமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, உங்கள் வருவாய்க்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை வரியாக செலுத்த நேரிட்டால், அந்த வரித் தொகைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு சதவீதம் என்ற அளவில் வட்டியும் செலுத்த நேரிடும்.

இந்த வரிக்கான வட்டித் தொகை என்பது, நீங்கள் செலுத்தும் தாமத கணக்குத் தாக்கலுக்கான அபராதத் தொகையுடன் கூடுதலாக வசூலிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here