Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – TCS, Wipro & Cognizant அலுவலகத்தில் வேலை செய்ய தடை? முழு விவரம் இதோ!

0
Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - TCS, Wipro & Cognizant அலுவலகத்தில் வேலை செய்ய தடை? முழு விவரம் இதோ!
Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - TCS, Wipro & Cognizant அலுவலகத்தில் வேலை செய்ய தடை? முழு விவரம் இதோ!
Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – TCS, Wipro & Cognizant அலுவலகத்தில் வேலை செய்ய தடை? முழு விவரம் இதோ!

சமீப காலமாக அதிகளவு அட்ரிஷன் விகிதங்களை பதிவு செய்து வரும் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட IT நிறுவனங்கள் திறமையைத் தக்கவைக்கும் முயற்சியில் வழக்கத்திற்கு மாறான சில நெறிமுறையற்ற தந்திரங்களை பின்பற்றுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட்ரிஷன் விகிதம்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சேவைகளை பூர்த்தி செய்வதற்காக முன்னணி IT நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் இவற்றின் அட்ரிஷன் விகிதங்கள் பயமுறுத்தும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டுமாக அலுவலகங்களை திறந்துள்ள டிசிஎஸ், அக்சென்ச்சர், விப்ரோ, ஐபிஎம், காக்னிசென்ட் உள்ளிட்ட IT நிறுவன ஊழியர்கள் தங்களது வேலைகளை ராஜினாமா செய்யத் துவங்கி இருக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், இந்த நடவடிக்கையானது IT நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மாநிலத்தில் மே 2 முதல் கோடை விடுமுறை – ஜூன் 13 பள்ளிகள் திறப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

இதனை கவனத்தில் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது போட்டி நிறுவனங்கள் சிலருடன் தொழிலாளர்கள் சேருவதைத் தடுக்க ஊழியர் ஒப்பந்தத்தில் ஒரு பிரிவை அமல்படுத்தி இருப்பதாக ஐடி மற்றும் பிபிஓ துறையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் சங்கம் கூறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு தொழிற்சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த வகையில் இன்போசிஸ் ஊழியர்களின் ஒப்பந்தங்களில் பெயரிடப்பட்டுள்ள போட்டி நிறுவனங்கள் TCS, Accenture, IBM, Cognizant ஆகும்.

ExamsDaily Mobile App Download

அதே போல வணிக செயலாக்க மேலாண்மை (BPM) பிரிவிற்கு, டெக் மஹிந்திரா, ஜென்பேக்ட், WNS, TCS, Accenture, IBM, Cognizant, Wipro மற்றும் HCL ஆகியவை இன்ஃபோசிஸ் ஊழியர்களின் ஒப்பந்தங்களில் பெயரிடப்பட்ட போட்டியாளர்களாகும். இந்த நடவடிக்கையானது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிகரித்து வரும் தேய்மானத்தின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது மார்ச் காலாண்டில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆண்டு அட்ரிஷன் விகிதம் 17.4% என்று அறிவித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது.

மேலும், ஜனவரி முதல் மார்ச் 2021ல் இருந்த 10.9% உடன் ஒப்பிடும்போது, ஜனவரி-மார்ச் 2022 காலக்கட்டத்தில் 27.7% வருடாந்திர தேய்வு விகிதத்தை இன்ஃபோசிஸ் அறிவித்தது. மற்ற முன்னணி IT நிறுவனங்கள் தங்கள் நான்காவது காலாண்டு மற்றும் முழு ஆண்டு 2021-22 முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், அடுத்த இரண்டு காலாண்டுகளில் அதன் தேய்வு விகிதம் சமமாக இருக்கும் என்றும் பின்னர் குறையும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

இந்த அட்ரிஷன் விகிதம் குறித்து புனேவைச் சேர்ந்த IT ஊழியர் சங்கமான NITES தலைவர் ஹர்ப்ரீத் சிங் சலுஜா கூறுகையில், ‘சந்தையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக அட்ரிஷன் விகிதம் மிக அதிகமாக உள்ளது. திறமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக போட்டியாளர்களிடமிருந்து தங்கள் பணியாளர்கள் பெற்ற சலுகைகளை நிறுவனங்கள் பெருக்குகின்றன. கடந்த சில வாரங்களில், எனக்கு சுமார் 65-70 புகார்கள் வந்துள்ளன. அங்கு இன்ஃபோசிஸ் புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!