தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பேலன்ஸ் பார்ப்பது எப்படி? முழு விவரம்!

0
தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - பேலன்ஸ் பார்ப்பது எப்படி? முழு விவரம்!
தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - பேலன்ஸ் பார்ப்பது எப்படி? முழு விவரம்!
தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பேலன்ஸ் பார்ப்பது எப்படி? முழு விவரம்!

தேசிய பென்சன் திட்டம், மத்திய அரசின் ஆதரவு கொண்ட திட்டம் ஆகும். இத்திட்டம் இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் 50 ரூபாய் சேமித்து ஓய்வுக்காலத்தில் ரூ.34 லட்சம் சம்பாதிக்கலாம். மேலும் மொபைலிலேயே பென்சன் பேலன்ஸ் தொகை பார்ப்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தேசிய பென்சன் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். ரூ.1,000 செலுத்தி நீங்கள் கணக்கைத் திறக்க முடியும். வருடத்துக்கு குறைந்த பட்சம் ரூ.250 சேமிக்க வேண்டும். தேசிய பென்சன் திட்டத்தில் தினமும் 50 ரூபாய் சேமித்து வந்தால், ஓய்வுக் காலத்தில் மாதத்துக்கு ரூ.9,000 பென்சன் கிடைக்கும். அதாவது வருடத்திற்கு ரூ.1,08,000 பென்சன் வாங்கலாம்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!

தொடர்ச்சியான சேமிப்பின் மூலம் 60ஆவது வயதுக்குப் பிறகு நிலையான பென்சன் தொகையைப் பெற முடியும். தினமும் 50 ரூபாய் என்றால் ஒரு மாதத்துக்கு ரூ.1,500 முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டம் பணி ஓய்வுக்குப் பின் நிலையான பென்சன் வருமானம் தருவது மட்டுமல்லாமல் வருமான வரி சலுகைகளையும் தருகிறது. மேலும் ரிட்டயர்மென்ட் வரை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். மெச்சூரிட்டி யின்போது 60% தொகையை எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகை மூலம் பென்சன் வருமானம் வரும். நபர் ஒருவர் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், அக்கவுண்ட்டில் எவ்வளவு மீதத் தொகை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு பிரான் நம்பர் வழங்கப்படும். பிரான் நம்பர் (PRAN Number) என்பது Permanent Retirement Allotment Number ஆகும். பென்சன் பேலன்ஸ் தொகையை பார்க்க பிரான் நம்பர் கட்டாயம் ஆகும்

1. பென்சன் பேலன்ஸ் சரிபார்க்க முதலில் NSDL இணையதளத்துக்கு (https://nsdl.co.in/) செல்ல வேண்டும்.

2.அங்கு பிரான் நம்பரை பயன்படுத்தி log in செய்ய வேண்டும். பின்பு Transaction Statement பகுதிக்கு கீழ் உள்ள Holding Statement என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3.இப்போது, நீங்கள் இதுவரை சேர்த்து வைத்துள்ள மொத்த பணமும் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

மாநிலத்தில் இந்த இடங்களில் முகக்கவசம் கட்டாயம் – அதிகரிக்கும் கொரோனா பரவல்!

UMANG ஆப் வாயிலாக பென்சன் பேலன்ஸ் சரிபார்க்க:

1. உமாங் (UMANG) மொபைல் ஆப் மூலமாகவும் பென்சன் பேலன்ஸ் பார்க்கலாம்.

2. உமாங் ஆப்பில் உள்ள NPS Services பகுதிக்கு செல்ல வேண்டும்.

3.அதில் Current Holding பகுதியில் பிரான் நம்பர் மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி நுழைய வேண்டும்.

4. அதில் பென்சன் பேலன்ஸ் தொகையை பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!