மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் முக்கிய வீரர் விலகல்! மாற்று வீரர் தேர்வு!

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - அணியின் முக்கிய வீரர் விலகல்! மாற்று வீரர் தேர்வு!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - அணியின் முக்கிய வீரர் விலகல்! மாற்று வீரர் தேர்வு!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் முக்கிய வீரர் விலகல்! மாற்று வீரர் தேர்வு!

இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இப்போது MI அணியின் பவுலிங் பிரிவில் 37 வயதான வீரர் ஸ்டூவர்ட் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்

கிரிக்கெட் ரசிகர்கள் இந்த சீசனில் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் இன்று (ஏப்ரல்.21) வந்திருக்கிறது. அதாவது, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நவி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ரசிகர்கள் இப்போதிலிருந்தே தங்களை தயார் செய்துகொள்ள துவங்கி உள்ளனர்.

IPL 2022 MI vs CSK: இன்றைய ஆட்டத்திற்கான ஒரு முன்னோட்டம் – உத்தேச XI அணி விவரம் இதோ!

அந்த வகையில் இன்று நடைபெறும் IPL 2022 சீஸனின் 33வது போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் தோல்வியின் விளிம்பில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இந்த ஆட்டம் வாழ்வா, சாவா போராட்டமாக தான் இருக்கும். ஏனெனில், கடந்த 6 போட்டிகளில் விளையாடி 6 ஆட்டங்களிலும் கடுமையான தோல்வியை தழுவி இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த போட்டி ஒரு முக்கிய திருப்பு முனையாக இருக்கும். அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது எதிராளி அணியான மும்பை இந்தியன்ஸை தோற்கடித்து இந்த சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்ய முயற்சிப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டெவோன் கான்வே தீடீரென போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே தனது காதலியை கரம் பிடிப்பதற்காக சென்னை அணியில் இருந்து விடை பெற்றிருக்கிறார். அதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் அவர் இருக்கமாட்டார். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

ExamsDaily Mobile App Download

 

அதாவது, MI அணியின் பிளேயிங் 11ல் இடம்பெற்று வந்த இங்கிலாந்து பவுலர் தைமல் மில்ஸ் காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் அவருக்கு மாற்றாக ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஸ்டூவர்ட் பின்னியை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. முன்னதாக வர்ணனையின் போது தனிமைப்படுத்தலில் இருந்து வந்த ஸ்டூவர்ட் பின்னி இப்போது மும்பை அணியில் நேரடியாக இடம்பிடித்துள்ளார். ஏற்கனவே பவுலிங் பிரிவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் MI அணியில் இவரது மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here