மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – டைமல் மில்ஸுக்கு பதிலாக அணியில் புதிய மாற்றம்!

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - டைமல் மில்ஸுக்கு பதிலாக அணியில் புதிய மாற்றம்!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - டைமல் மில்ஸுக்கு பதிலாக அணியில் புதிய மாற்றம்!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – டைமல் மில்ஸுக்கு பதிலாக அணியில் புதிய மாற்றம்!

நடப்பு சீசனில் இருந்து நாக் அவுட் செய்யப்பட்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்

15வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) காயம், ஏமாற்றம், ஜாம்பவான்களின் தோல்வி என பல வகையான எதிர்மறை சூழல்களால் நிறைந்திருக்கிறது. அதாவது, IPL போட்டிகளில் முடிசூடா மன்னர்களாக திகழும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டும் ஐபிஎல் 2022 லீக் ஆட்டத்திற்கு தகுதி பெறாமல் இப்போது வெளியேறி இருக்கிறது. இந்த சீசனை தோல்வியில் தொடங்கிய இவ்விரு ஜாம்பவான் அணிகளும் இப்போது புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்துள்ளது. குறிப்பாக, இந்த சீசன் துவங்குவதற்கு முன்பாகவே இவ்விரு அணிகளும் சில, பல காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

இதில் CSK அணியை பொறுத்தமட்டில் தீபக் சஹாரின் காயம், ஜடேஜா மற்றும் ருதுராஜின் பார்ம் அவுட், மொயீன் அலியின் காயம், கேப்டன்சி என பல விஷயங்கள் பாதித்திருந்தது. அதே போல MI அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் சீசனில் இருந்து முழுமையாக விலகி இருந்தது அணிக்கு பெரும் பின்னடைவாக மாறி இருக்கிறது. மறுபக்கத்தில் MI அணியின் முழுமையான செயல்திறன் இந்த ஆண்டு வெளிப்படாததால் அவர்கள் சீக்கிரமாகவே ஐபிஎல் 2022ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சூழலில் MI அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் டைமல் மில்ஸும் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – அடுத்த ஆட்டத்திற்கான DC பிளேயிங் 11 அணி!

இப்போது மில்ஸுக்குப் பதிலாக அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் MI அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக தேசிய தென்னாப்பிரிக்க ஏ அணிக்காக அறிமுகமான இவர் திறமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். இப்போது மில்ஸின் விலகல் குறித்து MI வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜிம்பாப்வேக்கு எதிராக தேசிய தென்னாப்பிரிக்க ஏ அணிக்காக அறிமுகமானார். மிகவும் நம்பிக்கைக்குரிய உள்நாட்டு பருவத்தை கொண்டிருந்த அவர் சமீபத்தில் முடிவடைந்த டி20 உள்நாட்டு லீக்கில் தனது அணிக்காக முக்கிய பங்கு வகித்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here