மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – KKRக்கு எதிரான ட்ரீம்11 & பிளேயிங் XI அணி விவரம் இதோ!

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - KKRக்கு எதிரான ட்ரீம்11 & பிளேயிங் XI அணி விவரம் இதோ!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - KKRக்கு எதிரான ட்ரீம்11 & பிளேயிங் XI அணி விவரம் இதோ!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – KKRக்கு எதிரான ட்ரீம்11 & பிளேயிங் XI அணி விவரம் இதோ!

இன்று நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த போட்டிக்கான Dream 11 டீம், ஹெட்-டு-ஹெட் ரெக்கார்டு, பிளேயிங் XI விவரங்களை இப்பதிவில் காணலாம்.

இன்றைய ஆட்டம்

இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது சீஸனில் இன்று (மே.9) நடைபெற இருக்கும் 56வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சரியாக மாலை 7.30 மணியளவில் DY பாட்டீல் ஸ்டேடியத்தில் வைத்து துவங்க உள்ளது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான KKR அணி கடந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் (LSG) 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், கடந்த ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற பிறகு MI அணி இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறது. அது போல ரோஹித் ஷர்மா தலைமையிலான MI அணி தற்போது 10 ஆட்டங்களில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் IPL 2022 புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. இதில் KKR ஏழு ஆட்டங்களில் நான்கு வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இப்போது பிளேஆஃப்களுக்கான பந்தயத்தில் இருந்து MI அணி கிட்டத்தட்ட வெளியேறி இருக்கிறது. அதே நேரத்தில் KKR இந்த தகுதிக்கான வாய்ப்புகளைத் தொடர மூன்று போட்டிகள் மீதமுள்ளன.

ஆனால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி இதுவரை எட்டு ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது. அந்த வகையில் இரு அணிகளும் மோதிய 30 போட்டிகளில் மற்ற 22 முறையும் மும்பை அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. கூடுதலாக, KKR அணி கடந்த ஐந்து ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. ஆனால் MI இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது இன்று நடைபெற இருக்கும் இந்த ஆட்டத்திலும் இவ்விரு அணிகளும் தங்களது வெற்றியை பதிவு செய்ய முழு முனைப்புடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: டிரீம் 11 அணி

  • கீப்பர் – இஷான் கிஷன் (WK)
  • பேட்ஸ்மேன்கள் – ஷ்ரேயாஸ் ஐயர் (C), சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, நிதிஷ் ராணா, டிம் டேவிட்
  • ஆல்ரவுண்டர்கள் – ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன்
  • பந்துவீச்சாளர்கள் – டிம் சவுத்தி, ஜஸ்பிரிட் பும்ரா, ரிலே மெரிடித்

பிளேயிங் XI:

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பி இந்திரஜித் (WK), ஆரோன் பிஞ்ச்/சாம் பில்லிங்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (C), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், அனுகுல் ராய், சிவம் மாவி/வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா/உமேஷ் யாதவ்
  • மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (C), இஷான் கிஷன் (WK), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், எம்.அஷ்வின்/ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!