LPG பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு – நிலவும் தட்டுப்பாடு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

0
LPG பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு - நிலவும் தட்டுப்பாடு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
LPG பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு - நிலவும் தட்டுப்பாடு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
LPG பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு – நிலவும் தட்டுப்பாடு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதன் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரம் தட்டுபபாடும் நிலவி வருகிறது. அதனால் சிலிண்டர் வாங்க தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்:

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கேற்றது போல எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றது. அதன்படி தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. இந்த சிலிண்டர் விலையை ஈடுகட்ட வழங்கப்படும் மானியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக விவசாயிகளுக்கான போட்டிகள் – ரூ. 2 லட்சம் வரை பரிசுத்தொகை! இன்றே விண்ணப்பியுங்கள்!

தற்போது இந்தியாவில் 92% மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தினந்தோறும் நாட்டில் கோடிக்கணக்கான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சில வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கும் அதிகமாக சிலிண்டர்களை பெற்று அதனை அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பது அதிகரித்துள்ளது. அதனால் முறையாக பதிவு செய்து வாங்கும் மானிய விலை வாடிக்கையாளர்கள் உரிய நேரத்தில் தங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

 

இதனையடுத்து மத்திய அரசு வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மற்ற வாடிக்கையாளர்கள் இனி ஒரு ஆண்டுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் வாங்க முடியாது என்ற நிலை வந்துள்ளது. மேலும் ஒரு மாதம் இரண்டு சிலிண்டர்களை மட்டும் தான் பெற முடியும். அதுவே மானிய விலையில் சிலிண்டர் பெறுபவர்கள் ஆண்டுக்கு 12 மட்டுமே முடியும் ஒருவேளை கூடுதலாக சிலிண்டர்கள் தேவைப்படுவோர் அதற்கான சான்றுகளை சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!