LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மேலுள்ள எண்களின் அர்த்தம் என்ன? முழு விவரம்!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மேலுள்ள எண்களின் அர்த்தம் என்ன? முழு விவரம்!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மேலுள்ள எண்களின் அர்த்தம் என்ன? முழு விவரம்!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மேலுள்ள எண்களின் அர்த்தம் என்ன? முழு விவரம்!

கேஸ் சிலிண்டரின் தலை பகுதியில் D-13, A-17, B-19 என்று பலவிதமான வெவ்வேறு எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். இது என்ன? இது எதை குறிக்கிறது? இதன் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இதன் மூலம் சிலிண்டர் வெடிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம் .

முழு விவரம்:

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட்கள் ஆகியவை சிலிண்டர்கள் விபத்துக்கு காரணமாக உள்ளது. மக்கள் பொதுவாக அதில் கவனம் செலுத்துவதில்லை என்பதால் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. காலாவதியான சிலிண்டர்களால்தான் சிலிண்டர்கள் விபத்து நடைபெறுகிறது. இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் பேசும்போது, சிலிண்டர் காலாவதியான தேதியை மக்கள் கவனிப்பதில்லை. வெடிவிபத்துக்கு அவையும் ஒரு காரணமாக இருப்பதால் மக்கள் அது குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

தமிழகத்தில் 800 பேருக்கு அரசுப்பணி – அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

வீடுகளில் பயன்படுத்தப்படும் எந்த எல்பிஜி சிலிண்டரின் அதிகபட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இந்த காலகட்டத்தில், எரிவாயு நிறுவனங்கள் அந்த சிலிண்டரை இரண்டு முறை சோதனை செய்து திறனை சரிபார்க்கின்றன. முதல் சோதனை 5 ஆண்டுகள் முடிந்த பிறகும், இரண்டாவது சோதனை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் செய்யப்படுகிறது. இந்த சோதனை விவரம் உங்கள் சிலிண்டரின் மேற்புறத்திலும் எழுதப்பட்டுள்ளது. இரண்டு தேதிகளும் கடந்துவிட்டால், அந்த சிலிண்டரை எடுக்க வேண்டாம். பெரும்பாலும் இவை A,B,C,D, என்ற நான்கு எழுத்துகளில் எவையேனும் ஒன்றை கொண்டு துவங்கி அதை தொடர்ந்து ஒரு ஐஃபன் குறியுடன் இரண்டு இலக்கத்தில் 12, 13, 14, 15 என ஏதேனும் எண் குறிக்கப்பட்டிருக்கும். கேஸ் சிலிண்டரில் குறிக்கப்பட்டிருக்கும் இந்த A,B,C,D என்ற நான்கு எழுத்துக்கள் உண்மையில் மாதங்களை குறிக்கின்றன.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

A என்பது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B என்பது ஏப்ரல், மே, ஜூன் என்ற மாதங்களையும், C என்பது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என்ற மாதங்களையும், D என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிக்கின்றன. இது போக ஆங்கில எழுத்துடன் சேர்த்து ஒரு இரண்டு இலக்க எண்ணும் அந்த குறியீட்டில் இடம் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் சிலிண்டரில் பி.24 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதி ஜூன் 2024 என்று அர்த்தம். மறுபுறம், இது C.26 ஆக இருந்தால், உங்கள் சிலிண்டர் செப்டம்பர் 2026 வரை இயங்கும் என்று அர்த்தம். அதன் பிறகு அதை மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சிலிண்டர் வெடிக்கும் அபாயம் அதிகம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!