LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - இதை தெரிந்து கொள்வது கட்டாயம்! LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை பதிவு வெளியாகி உள்ளது. உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. எனவே பொதுமக்கள் கேஸ் சிலிண்டர் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் விபத்து ஏற்படுத்துவதை தடுக்கலாம். முக்கியமாக சிலிண்டரின் மேல் பகுதியில் எழுதப்பட்டுள்ள எண்களின் அர்த்தத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை பதிவு:

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. வீடுகளில் எல்பிஜி சிலிண்டர்களில் தீப்பிடிக்கும் சம்பவங்களுக்கு வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்கியூட் கள் முக்கிய காரணமாக உள்ளன. அதே நேரத்தில் சிலிண்டர்கள் விபத்துக்கு மற்றொரு காரணம் மக்கள் பொதுவாக அதில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் விபத்தைச் சந்திக்க நேரிடுகிறது. இதை தொடர்ந்து சிலிண்டர்கள் விபத்துக்கு காலாவதியான சிலிண்டர்களும் முக்கிய காரணம் ஆகும். இது குறித்து அதிகாரிகள் கூறியது, சிலிண்டர் காலாவதியான தேதியை மக்கள் கவனிப்பதில்லை. வெடிவிபத்துக்கு அவையும் ஒரு காரணமாக இருப்பதால் மக்கள் இது குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி உள்ளது என்பதை முதலில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

Exams Daily Mobile App Download

ஒரு கட்டத்துக்குப் பிறகு சிலிண்டர்கள் பழையதாகி வாயு அழுத்தம் தாக்க முடியாமல் வெடித்துச் சிதறிவிடும் என எச்சரிக்கின்றனர். விற்பனையாளரிடம் இருந்து LPG சிலிண்டரை எடுக்கும்போது, கண்டிப்பாக காலாவதி தேதியை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரின் கைப்பிடியுடன் இணைக்கும் உலோக கீற்றுகளின் உள் பக்கத்தில் இந்த ‘எண் -எழுத்து’ எழுதப்பட்டுள்ளது. இது ஒரு எண்ணெழுத்து எண், அது A, B, C மற்றும் D ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரு எண் உடன் தொடர்கிறது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு வருடத்தின் கால் பகுதியைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் A என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு? இன்று வெளியாகும் முடிவு!

ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு B என்ற எழுத்தும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் C எழுத்தும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் D எழுத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் எண்கள் ஆண்டைக் குறிக்கின்றன. உங்கள் சிலிண்டரில் B.24 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதி ஜூன் 2024 என்று அர்த்தம். சிலிண்டரில் C.22 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் சிலிண்டர் செப்டம்பர் 2022 வரை இயங்கும் என்று அர்த்தம். அதன் பிறகு அதை மாற்ற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது அபாயம் என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் பயன்படுத்தப்படும் LPG சிலிண்டரின் அதிகபட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இந்த காலகட்டத்தில், எரிவாயு நிறுவனங்கள் அந்த சிலிண்டரை இரண்டு முறை சோதனை செய்து திறனை சரிபார்க்கின்றன. முதல் சோதனை 5 ஆண்டுகள் முடிந்த பிறகும், இரண்டாவது சோதனை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் செய்யப்படுகிறது. இந்த சோதனை விவரம் உங்கள் சிலிண்டரின் மேற்புறத்திலும் எழுதப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!