LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இனி மானியம் கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!

1
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - இனி மானியம் கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - இனி மானியம் கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இனி மானியம் கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!

இந்தியாவில் மாதந்தோறும் சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு சார்பாக மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மானியத் தொகையை அரசு நிறுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மானியத்தொகை:

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகளால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஏற்கனவே மக்கள் கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் வேளையில் விலைவாசி உயர்வு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் மாதந்தோறும் சிலிண்டர் விலையானது மாற்றம் கண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியில் அரசு சார்பாக மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 200 முதல் 300 ருபாய் வரை சிலிண்டருக்கு மத்திய அரசு மானியத்தொகை வழங்கி வந்தது. தற்போது 20 முதல் 30 ரூபாய் வரை தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டும் ரூ. 200 மானியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் பெறும் சிலிண்டர் விலை ரூ.803 ஆக உள்ளது.

SIDBI நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்த நிலையில் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகள் இல்லாத மற்றவர்களுக்கு சிலிண்டர் மானியத்தொகையை படிப்படியாக குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகிறார் மேலும் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது போல, சிலிண்டருக்கான மானியமும் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளார். அதனால் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இல்லாத 21 கோடிக்கும் அதிகமான சிலிண்டர் பயனர்கள் இனி சந்தை விலைக்கே சிலிண்டர் வாங்க வேண்டி இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. The news item subsidy for LPG domestic customers are getting is bogus claim. It has been stopped long back.
    If it is referring to ujjala scheme may be true.
    My Gas agency says Sir, the subsidy was stopped long back after Covid spread.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!