வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு.. SBI வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு – தவற விடாதீர்கள்!

0
வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு.. SBI வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு - தவற விடாதீர்கள்!
வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு.. SBI வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு - தவற விடாதீர்கள்!
வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு.. SBI வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு – தவற விடாதீர்கள்!

பாரத ஸ்டேட் வங்கி தற்போது ப்ரோபேஷனரி ஆபீசர்ஸ் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பணிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே உள்ள பதிவை முழுவதுமாக படித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SBI PO வேலைவாய்ப்பு:

எஸ்பிஐக்கான ப்ரோபேஷனரி ஆபீசர்ஸ் பதவிக்கும், எஸ்பிஐயின் அசோசியேட் வங்கிகளில் தனித்தனியாக ப்ரோபேஷனரி அதிகாரிகளுக்கும் வருடாந்திர ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் பொதுவாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே அறிவிக்கப்படும். அந்த வகையில், SBI வங்கியின் அதிகாரபூர்வ டிவீட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் ப்ரோபேஷனரி ஆபீசர்ஸ் பதவிக்கு நியமனம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

எஸ்பிஐக்கான ப்ரோபேஷனரி ஆபீசர்ஸ் பணிக்கு அனைத்து இந்திய குடிமக்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த கிளையிலும் நியமிக்கப்படுவார்கள். மேலும், மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் , பட்டப்படிப்பின் இறுதியாண்டு படிப்பவர்களும் கலந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பணியாளர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், அரசு அனுமதி அளித்துள்ளவாறு பிரிவு வாரியாக தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் இவ்வளவு நாட்கள் வங்கி விடுமுறையா – முன்பே தெரிஞ்சு வச்சுக்கோங்க!

தேர்வு நடைமுறை:

முதற்கட்டத் தேர்வில் தகுதிபெற்று, தேர்வு செய்யப்பட்டவர்கள் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் மற்றும் முதன்மைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.statebankofindia.com அல்லது www.sbi.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவிற்கான கட்டணத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலும் பிரிவு வாரியாக தளர்வுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடப்பு ஆண்டிற்கான விண்ணப்ப தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!