Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள்!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை விரும்புவோருக்கு ரூ.249 முதல் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் சில திட்டங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சந்தாவுடன் வருகின்றன.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் பயன்பாடுகள் அதிகரிக்க துவங்கியதுடன் ஒரு காலத்தில் மிகவும் கவனமாக பயன்படுத்தப்பட்ட மொபைல் டேட்டா இப்போது சர்வ சாதாரணம் ஆகியுள்ளது. ஏனென்றால் ஜியோ நிறுவனம் மலிவான விலையில் மொபைல் டேட்டா அணுகலை வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. முன்பு ஒரு மாதம் முழுவதும் வெறும் 2ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு நாளில் 2ஜிபி டேட்டா வரைக்கும் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

அத்தகைய நபர்களுக்காக, ஜியோ 2 ஜிபி டேட்டா திட்டங்களை உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்கள் ரூ.249 முதல் தொடங்குகின்றன. தவிர இது போன்ற விலை உயர்ந்த திட்டங்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாக்களுக்கான அணுகலும் உள்ளன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ 249 திட்டத்தை ரீசார்ஜ் செய்து 23 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் மொத்தம் 46 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்ஸ்களும் இலவசமாக கிடைக்கிறது.

அடுத்ததாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்ஸ்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஜியோவின் ரூ 533 திட்டம் 56 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அதே போல் ரூ.719க்கான திட்டத்தை 84 நாட்கள் செல்லுபடி காலத்துடன் 2 ஜிபி டேட்டாவை முன் சொல்லப்பட்ட சலுகைகளுடன் அனுபவிக்கலாம்.

அடுத்ததாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799 திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட், ரூ.499 மதிப்புள்ள Disney + Hotstar மொபைல் ஒரு வருட சந்தாவுடன் இலவசமாக வருகிறது. அடுத்ததாக, ரூ.1066 திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டமும் மற்ற பயன்பாடுகளுடன் ரூ.499 மதிப்புள்ள Disney + Hotstar மொபைல் ஒரு வருட சந்தாவுடன் வருகிறது. கடைசியாக, ரூ.2879 திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ ஆப்ஸின் இலவச அணுகலுடன் கொடுக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!