Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!

0
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ஜியோ நிறுவனம் பரந்த அளவிலான ரீசார்ஜ் திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை போல ஜியோவும் இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் அன்லிமிடெட் டேட்டா, கால்ஸ் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்கி மிக குறுகிய காலத்திலேயே இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான ரீசார்ஜ் திட்டங்களை இலவச குரல் அழைப்புகள், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வழங்குவதால் ஜியோவின் ஆல் இன் ஒன் பேக்குகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

Exams Daily Mobile App Download

பொதுவாக, டெலிகாம் பயனர்கள் ப்ரீபெய்ட் பேக்குகளில் வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான சேவைகளை பெறும்போது, அதில் பெரும்பாலானவை டேட்டா வரம்பு வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. மேலும் அதிவேக தினசரி டேட்டா வரம்பு தீர்ந்துவிட்டால், பயனர்கள் குறைந்த வேகத்தில் இலவச இணையத்தைப் பயன்படுத்த முடியும். இது WhatsApp போன்ற பயன்பாடுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமே போதுமானது. ஆனால் இது போன்ற நேரங்களில் பயனர்களுக்கு கைகொடுக்க கூடிய சில சிறந்த திட்டங்களை ஜியோ வழங்குகிறது.

அந்த வகையில் நீண்ட காலம் வரை செல்லுபடியாகும் திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.2,999 திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் 265 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா கிடைக்கும். ஜியோவின் ரூ.299 திட்டமானது, 56ஜிபி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? புதிய பாடத்திட்டம் வெளியீடு!

இதில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகிய பிற நன்மைகளும் கிடைக்கின்றன. அடுத்ததாக ஜியோ ரூ.499க்கு ஒரு திட்டத்தை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் வழங்குகிறது. அடுத்ததாக பயனர்கள் ஜியோவின் ரூ.719 திட்டத்தில், 168ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!