Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 3 முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு!

0
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 3 முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 3 முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 3 முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது 3 முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இப்போது உயர்த்தப்பட்ட ரீசார்ஜ் விலையின் முழு பட்டியலையும் இப்பதிவில் காணலாம்.

ரீசார்ஜ் திட்டம்

இன்றைய இணைய உலகில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களின் வருகை மனிதர்களை இணையதளத்திற்குள் கட்டிப் போட்டிருந்தாலும் இவை இல்லாமல் நம்மால் எந்தவொரு சேவையையும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதை கவனத்தில் கொள்ளும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டங்களை அதிகரித்து வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், பயனர்களும் அந்த விலைக்கேற்ப தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது 3 முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முன், ஜியோபோன் திட்டங்கள் ரூ.155ல் தொடங்கி ரூ.749 வரை சென்றது. இப்போது ஜியோஃபோனுக்கான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக சலுகை முடிவடைந்து, கட்டணங்கள் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து ஜியோபோன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 20 சதவீத உயர்வுக்குப் பிறகு, ஜியோபோன் திட்டங்கள் இப்போது ரூ.155 க்கு பதிலாக ரூ.186 என்ற விலையில் தொடங்குகின்றன.

ரூ.186 திட்டம்:

இந்த திட்டம் முன்பு ரூ.155 விலையில் இருந்த ஒரு அடிப்படைத் திட்டம் ஆகும். இதன் கீழ் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை இலவசமாக கிடைக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை பெற விரும்புபவரா? அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்…!

ரூ.222 திட்டம்:

அடுத்ததாக ரூ.222 மதிப்புள்ள இரண்டாவது திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தில் கிடைக்கும். இதற்கான தினசரி டேட்டா முடிந்ததும் அதன் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை இலவசமாக கொடுக்கப்படுகிறது.

ரூ.899 திட்டம்:

இந்த ஜியோபோன் திட்டம் 336 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 24ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டம் 50 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு இலவச குரல் அழைப்பு சேவைகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் தொகுக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் சேவை சலுகைகளும் அடங்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!