Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தற்போது ரூ.500 க்கும் குறைவான பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கான முழு விவரங்களும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்:

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் அவ்வப்போது சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது ரூ.500 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. மேலும் இத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும், கூடுதலாக சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. தற்போது, Jio, Airtel மற்றும் Vi நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 1 மாதம் வேலிடிட்டி ரூ.259 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அடுத்ததாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ ரூ.419 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 56 நாட்கள் வேலிடிட்டி ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

அடுத்ததாக வோடாபோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பார்க்கலாம். முதலில், 18 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 21 நாட்கள் வேலிடிட்டி ரூ.209 திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அடுத்ததாக 21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், 31 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.319 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இன்டர்நெட் வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 28 நாட்கள் வேலிடிட்டி ரூ.409 திட்டத்தில் தினசரி 3.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இன்டர்நெட் வசதி வழங்கப்படுகிறது.

மேலும், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.475 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 4 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இன்டர்நெட் வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 28 நாட்கள் வேலிடிட்டி ரூ.499 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இன்டர்நெட் வசதி, ஒரு ஆண்டிற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வசதி வழங்கப்படுகிறது. அடுத்ததாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

முதலில், 21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.209 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 28 நாட்கள் வேலிடிட்டி ரூ.265 திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
வழங்கப்படுகிறது. அடுத்ததாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.359 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், Amazon Prime வசதி, மூன்று மாதத்திற்கான Apollo membership வசதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை ‘இந்த’ மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு – மின்வாரியம் தகவல்!

மேலும், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மூன்று மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 56 நாட்கள் வேலிடிட்டி ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ரூ.100 கேஷ்பேக், மூன்று மாதத்திற்கான Apollo membership வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.499 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ரூ.100 கேஷ்பேக், மூன்று மாதத்திற்கான Apollo membership வசதி மற்றும் ஒரு ஆண்டிற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வசதி வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!