ICAR 462 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கவனத்திற்கு – காலக்கெடு நீட்டிப்பு!

0
ICAR 462 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கவனத்திற்கு - காலக்கெடு நீட்டிப்பு!
ICAR 462 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கவனத்திற்கு - காலக்கெடு நீட்டிப்பு!
ICAR 462 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கவனத்திற்கு – காலக்கெடு நீட்டிப்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு ,462 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. எனவே, வரும் ஜூன் 21ம் தேதி வரை தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அன்றைய தினமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

காலக்கெடு நீடிப்பு:

நாடு முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் முடிந்து படிப்படியாக நாம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம். இந்நிலையில் அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் கடந்த மே 7ம் தேதி அன்று டெல்லியில் உள்ள தலைமையகம் மற்றும் அதன் இதர அமைப்பு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு அறிவித்தது. அப்போது, இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 1 என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெருமளவிலான மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை வேளாண் ஆராய்ச்சி குழு நீட்டித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது வரும் ஜூன் 21ம் தேதி வரை தேர்வர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 20-க்கு மேலும், 30 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இதற்கான, விண்ணப்பப் பதிவு கட்டணம் ரூ.700 ஆகும். கூடுதலாக, தேர்வுக் கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். மேலும் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவினரைச் சேர்ந்த மகளிர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 ஐ மட்டும் செலுத்த வேண்டும் .

ரயில் பயணிகள் கவனத்திற்கு – புதிய மாற்றம்! இதனை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!

ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1200 செலுத்த வேண்டும். மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் தாராளமாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்மைத் தேர்வு, திறனறிவுத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி:
  • விண்ணப்பதாரர்கள், https://www.iari.res.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • பின்பு இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • இதையடுத்து ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!