IBPS, RRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – நாளை (ஆக.17) ஆன்லைன் மாதிரி தேர்வு!
எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது IBPS, RRB உள்ளிட்ட தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அரசு வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வருகிற ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 3,4ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதே போல் RRBயின் NTPC CBT 2 தேர்வு வருகிற ஆகஸ்ட் 10 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்களுக்கிடையே கடுமையான போட்டிகள் இருக்கும்.
இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி IBPS, RRB உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்குரிய Aptitude பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
Mock Test 2022
IBPS / RRB EXAM (REASONING) : Click here
Online Test Series 2022
IBPS / RRB Examination 2022 : Click here
Bank Examination : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now