வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – EMI குறைப்பது எப்படி?

0
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு - EMI குறைப்பது எப்படி?
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு - EMI குறைப்பது எப்படி?
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – EMI குறைப்பது எப்படி?

கடந்த சில மாதங்களாக வீடு விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் குறுகிய கால சலுகையாக 6.50% வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்குவதாகவும், பிராசஸிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது. இது வீட்டு கடன் வாங்க உள்ளவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஆகும்.

EMI குறைப்பது எப்படி:

சொந்த வீடு என்பது ஒரு வகை முதலீடு என்ற பொருளாதார நோக்கில் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மத்திய தர மக்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலமாக பெறப்பட்ட கடன்கள் வாயிலாகத்தான் தங்களது சொந்த வீட்டு கனவை நிஜமாக்குகிறார்கள். வீட்டு கடன்கள் பெரும்பாலும் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட தவணைக்காலம் கொண்டவையாக இருக்கின்றன. ஒரு தனி மனித வாழ்வில் 10 வருடங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலகட்டம் என்பது பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். வங்கி கடனை திருப்பி செலுத்தும் விஷயத்தில் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட காலத்தை செலவழிக்க வேண்டியதாக உள்ளது என்று பலரும் தெரிவிப்பது கவனிக்கத்தக்கது.

ExamsDaily Mobile App Download

வீட்டுக் கடன் மாத EMI தொகை அதிகம் என்பதால் மாதாந்தர சுமையும் அதிகம். எனவே, வீட்டுக் கடன் பெறுவதற்கு முன் குறைந்த வட்டிக்கு எந்த வங்கியில் கடன் கிடைக்கும் என்பதை பார்த்து வாங்க வேண்டும். வேறு வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும், Balance Transfer மூலம் குறைந்த வட்டிக்கு வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்ளலாம். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டு இருப்போருக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன்படி, வீட்டுக் கடன் வாங்குவோர் முன்பை விட குறைந்த வட்டிக்கு பெற முடியும்.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்த வங்கி வீட்டுக் கடன் வட்டியை 6.75 விழுக்காட்டில் இருந்து 6.50 விழுக்காடாக குறைத்துள்ளது பேங்க் ஆஃப் பரோடா. எனினும், இதுவொரு குறுகிய கால சலுகை மட்டுமே. எனவே, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் பெற விரும்புவோர் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் பேங்க் ஆஃப் பரோடாவில் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்போருக்கு மட்டுமல்லாமல், வேறு வங்கிகளில் இருந்து வீட்டுக் கடனை மாற்ற (Balance Transfer) விரும்புவோரும் 6.50% வட்டிக்கு வீட்டுக் கடன் பெறலாம். இதற்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லா கடன் தொகைக்கும் இந்த வட்டி விகிதம் கிடைக்கும். எனினும், உங்களின் சிபில் ஸ்கோர் (CIBIL Score) 771 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே 6.50% வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!