HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்வு! முழு விபரம் இதோ!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்வு! முழு விபரம் இதோ!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்வு! முழு விபரம் இதோ!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்வு! முழு விபரம் இதோ!

கடந்த ஜூன் 9ம் தேதியன்று HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் நேற்று (ஜூன் 10) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வீட்டுக்கடன் வட்டி

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான HDFC தனது வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த மே மாதத்தில் இருந்து இதோடு நான்காவது முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ஜூன் 10 முதல் நடைமுறைக்கு வந்த HDFC வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.55% முதல் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஒரு அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத புள்ளியில் நூறில் ஒரு பங்கு என கணக்கிடப்படுகிறது.

தமிழக மக்களே உஷார் – அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இதற்கு முன்னதாக இவ்வங்கியில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கடந்த மே 2ம் தேதியன்று 5 அடிப்படை புள்ளிகளும், மே 9ம் தேதி 30 அடிப்படை புள்ளிகளும் உயர்த்தப்பட்ட நிலையில் ஜூன் 1 அன்று கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இப்போது மீண்டுமாக உயர்த்தப்பட்டுள்ள HDFC வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 30 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் 7.70 சதவீதமாக இருக்கும். அதே நேரத்தில் ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சத்துக்கு மேல் உள்ள கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.95 சதவீதமாக இருக்கும்.

மேலும், ரூ.75 லட்சத்துக்கு மேல் உள்ள கடன்களுக்கான வட்டி விகிதம் 8.05 சதவீதமாக இருக்கும் என்றும் பெண்களுக்கு இந்தக் கடன்களில் 0.05% தள்ளுபடி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது HDFC வங்கியில் கடன் பெற்றவர்கள் அதிக வட்டி விகிதங்களை ரீசெட் தேதி வந்தவுடன் செலுத்த வேண்டும். இதற்கிடையில் சமீபத்திய வட்டி விகித உயர்வு மூலம் கடன்களுக்கான EMI தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 20 வருட தவணையில் ரூ.30 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர்கள் 7.20 சதவீத வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.23,620 EMI ஆக செலுத்தி இருப்பார்கள்.

ஆனால் தற்போதைய 7.70 சதவீத வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.24,536 என்ற அடிப்படையில் கூடுதலாக ரூ.916 செலுத்த வேண்டும். இந்த எண்ணிக்கை 20 வருட தவணையில் ரூ.50 லட்சம் வீட்டுக்கடனாக பெற்றவர்கள் தற்போது 7.95 சதவீத வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.41,667 என்ற அடிப்படையில் கூடுதலாக ரூ.1,540 கட்ட வேண்டும். மேலும், 20 வருட தவணையில் ரூ.80 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர்கள் 7.55 சதவீத வட்டியுடன் கூடுதலாக ரூ.2,472 தொகையை EMI ஆக செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!