HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

வட்டிகளுக்கான ரெப்போ விகிதம் உயர்ந்ததை தொடர்ந்து HDFC வங்கியும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திவிட்டது. தற்போது எவ்வளவு FD விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FD விகிதம்

இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்திய நிலையில் பல வங்கிகள் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திவிட்டது. இந்நிலையில், எச்டிஎஃப்சி வங்கியும் FD விகிதங்களை உயர்த்தியிருக்கிறது. மேலும், இந்த புதிய வட்டி விகிதம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, எச்டிஎஃப்சி வங்கி 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50%மும், மூத்த குடிமக்களுக்கு 4.00% வரைக்கும் வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50%மும், மூத்த குடிமக்களுக்கு 4.00% வரைக்கும் வட்டி விகிதமும், 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.60%மும், மூத்த குடிமக்களுக்கு 4.10% வரைக்கும் வட்டி விகிதமும், 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 4.00%மும், மூத்த குடிமக்களுக்கு 4.50% வரைக்கும் வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்? கேரள அரசு அதிரடி!

மேலும், 61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 4.75%மும், மூத்த குடிமக்களுக்கு 5.25% வரைக்கும் வட்டி விகிதமும், 90 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.25%மும், மூத்த குடிமக்களுக்கு 5.75% வரைக்கும் வட்டி விகிதமும், 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.50%மும், மூத்த குடிமக்களுக்கு 6.00% வரைக்கும் வட்டி விகிதமும், 120 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.70%மும், மூத்த குடிமக்களுக்கு 6.20% வரைக்கும் வட்டி விகிதமும், 1 ஆண்டு முதல் 15 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.05%மும், மூத்த குடிமக்களுக்கு 6.55% வரைக்கும் வட்டி விகிதமும், 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.05%மும், மூத்த குடிமக்களுக்கு 6.55% வரைக்கும் வட்டி விகிதமும், 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.05%மும், மூத்த குடிமக்களுக்கு 6.55% வரைக்கும் வட்டி விகிதமும், 21 மாதங்கள் முதல் 2 ஆண்டு வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.05%மும், மூத்த குடிமக்களுக்கு 6.55% வரைக்கும் வட்டி விகிதமும், 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.10%மும், மூத்த குடிமக்களுக்கு 6.60% வரைக்கும் வட்டி விகிதமும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.90%மும், மூத்த குடிமக்களுக்கு 6.65% வரைக்கும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!