HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FDக்கான வட்டி விகிதங்களில் மாற்றம்!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FDக்கான வட்டி விகிதங்களில் மாற்றம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FDக்கான வட்டி விகிதங்களில் மாற்றம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FDக்கான வட்டி விகிதங்களில் மாற்றம்!

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான HDFC வங்கி 2வது முறையாக ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. ஹச்டிஎஃப்சி யின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் அனைத்தும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது

HDFC வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி அவ்வப்போது ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. மூத்த குடிமக்களின் எஃப்டி கணக்குகளுக்கு வட்டி அதிகமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ள புதிய வட்டி விகிதம் கடந்த ஜூன் 17 முதல் அமலுக்கு வந்துள்ளது. 7 முதல் 29 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்பு தொகைக்கு 2.50 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 30 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்பு தொகைக்கு 3 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி எப்போது? முக்கிய தகவல் இதோ!

91 முதல் 6 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்பு தொகைக்கு 2.50 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற தவணை முதிர்ச்சியடையும் நிலையான வைப்பு தொகை டெபாசிட்டுகளுக்கு 10 புள்ளிகள் முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 2.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 2.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 3.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 3.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 3.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 3.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 4.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

9 மாதங்கள்1 நாள் முதல் 1வருடம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 4.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1வருடம் 1 நாள் முதல் 2 வருடம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 5.35 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.85 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 5.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.00 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 5.70 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் 1நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 5.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!