அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – கிடுக்கிப்பிடி உத்தரவு!
ஆப்கானிஸ்தானில் அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும், கல்லூரி மாணவிகள் வகுப்பறையில் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என பல உத்தரவுகளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
கிடுக்கிப்பிடி உத்தரவு:
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியின்கீழ் இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் விலகிய நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். கடந்த 20202ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா தனது மொத்த படைகளையும் ஆப்கனில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த அமெரிக்கா மெல்லத் தனது படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியதும், சற்றும் தாமதிக்காத தாலிபான்கள் மீண்டும் ஆப்கனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தொடங்கியது.
Exams Daily Mobile App Download
முதலில் எல்லைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபான்கள், பிறகு கிராமப்புறங்களையும் அடுத்து நகர்ப்புறங்களையும் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மேலும் தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சமீபத்தில் ஹெராத் மாகாணத்தில் உள்ள சலூன் கடைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானிய ஆண்கள் அதிலும் முக்கியமாக மாணவர்களுக்கு மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மேற்கத்தியர்களை போன்று முடிகளை வெட்டக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாணவிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்புபடி, அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்றும் தாலிபான் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
மேலும், அரசு ஊழியர்கள் முழு அளவில் வளர்ந்த தாடி வைத்திருக்க வேண்டும். அப்படி தாடி வளர்க்காவிட்டால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஹெராத் மாகாணத்தில் துணி விற்பனை செய்யும் கடைகளில் வைக்கப்படும் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்றும், இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பல்க் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவிகள் ஹிஜாப் அணியாமல் சென்றதாக புகார் எழுந்த நிலையில், அந்த பள்ளியை தாலிபான்கள் மூடி உள்ளனர். மேலும் கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.