Gmail பயனரா நீங்கள்.. அப்போ இந்த விஷயத்தை கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும் – முழு விவரம் உள்ளே!

0
Gmail பயனரா நீங்கள்.. அப்போ இந்த விஷயத்தை கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும் - முழு விவரம் உள்ளே!
Gmail பயனரா நீங்கள்.. அப்போ இந்த விஷயத்தை கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும் – முழு விவரம் உள்ளே!

மக்கள் மத்தியில் ஆண்ட்ராய்டு போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்றார் போல செயலிகளின் பயன்பாடுகளும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் முக்கிய செயலியான ஜிமெயிலில் உங்களுடைய அக்கவுண்ட்டை எவ்வாறு டெலிட் செய்யலாம் என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜிமெயில் அக்கவுண்ட்:

தற்போது டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட நிலையில் அனைத்து தேவைகளும் நமக்கு கைக்குள் செல்போன்களில் வந்துவிட்டன. இப்போது கடல் கடந்து இருக்கும் நம்முடைய சொந்தங்களிடம் தகவல்களை பரிமாறிக் கொள்வது என்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் ஜிமெயில் செயலியை பலர் அலுவலக தேவைக்கும், முக்கிய தரவுகளை அனுப்பவும் பயன்படுத்தி வருகின்றனர். என்ன தான் வாட்ஸ்ஆப் செயலி இந்த வேலையை செய்தாலும், அந்த காலம் முதல் ஜிமெயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப் போல ஜிமெயில் அக்கவுண்ட்டை எளிமையாக நீக்க முடியாது. குறிப்பாக உங்களுடைய ஆண்ட்ராய்டு போனில் செயலிகள் அனைத்தும் இயங்க ஜிமெயில் அக்கவுண்ட்டை லாகின் செய்வது கட்டாயமாகும். இந்நிலையில் ஜிமெயில் அக்கவுண்ட்டை எவ்வாறு உங்களது மொபைலில் இருந்து நீக்கலாம் என்பது குறித்த எளிய வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம். அதன் மூலம் நீங்கள் எளிமையாக ஜிமெயில் அக்கவுண்ட்டை டெலீட் செய்யலாம்.

Exams Daily Mobile App Download

நீங்கள் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை டெலீட் செய்வதற்கு முன் அதில் உள்ள தரவுகளை பேக்கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதனை மீண்டும் எடுக்க முடியாத நிலை ஏற்படும்

அதன் பின் நீங்கள் செட்டிங் பகுதிக்குள் செல்ல வேண்டும். அதில் உள்ள கூகுள் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அதில் மேனேஜ் யுவர் கூகுள் அக்கௌன்ட் என்பதை தேர்வு செய்ய வேண்டும். Settings > Google > Manage your google account

அதன் பின் மேல்பக்கத்தில் டேட்டா & பிரைவசி என்று இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும்.

மீண்டும் ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்! கட்டுப்பாடுகள் அமல்!

பின் நீங்கள் கீழ் புறமாக ஸ்க்ரோல் செய்து கொண்டே போனால் டவுன்லோட் அல்லது டெலிட் யுவர் டேட்டா என்ற பகுதி இருக்கும். அதற்கு கீழ் உள்ள டெலிட் கூகுள் சர்வீஸ் என்று இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் gmail கடவுச்சொல்லை கொடுத்து sign in செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு கூகுள் மூலமாக கிடைக்கும் அனைத்து சேவைகளும் காட்டப்படும்.

அதில் ஜிமெயிலை தேர்வு செய்து அருகில் இருக்கும் டெலிட் பாக்ஸை க்ளிக் செய்ய வேண்டும். பின் புதிதாக பயன்படுத்த போகிற ஈமெயில் ஐடியை என்டர் செய்து அதை வெரிஃபை செய்து கொள்ள வேண்டும். இப்போது தான் நீங்கள் டெலிட் செய்ய நினைக்கும் ஐடி டெலிட் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!