Whatsapp பயனர்கள் கவனத்திற்கு – Group Chat ல் வரவிருக்கும் புதிய அப்டேட்!

0
Whatsapp பயனர்கள் கவனத்திற்கு - Group Chat ல் வரவிருக்கும் புதிய அப்டேட்!
Whatsapp பயனர்கள் கவனத்திற்கு - Group Chat ல் வரவிருக்கும் புதிய அப்டேட்!
Whatsapp பயனர்கள் கவனத்திற்கு – Group Chat ல் வரவிருக்கும் புதிய அப்டேட்!

கடந்த ஒரு மாதமாகவே வாட்ஸ்ஆப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட்டபடியே இருக்கிறது. இந்நிலையில், Group Chat ல் சில அப்டேட்களை இன்னும் சில வாரங்களில் வாட்ஸ்ஆப் வெளியிட இருக்கிறது. அது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்ஆப் பயனர்களின் விவரங்கள் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பயனர்களின் விருப்பத்தை புரிந்துகொண்டு பல அம்சங்களுடன் கூடிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது.

கடந்த மூன்று வாரங்களாவே பல அப்டேட்கள் வெளிவந்துவிட்டது. அதாவது, பயனர் ஒருவர் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளலாம். மேலும், வாட்ஸ்ஆப் குரூப்பில் அனுப்பப்படும் தேவையில்லாத கருத்துக்களை அட்மின் நீக்கிகொள்ளலாம். மேலும், குரூப்பில் யாருக்கும் தெரியாமல் விலகிக்கொள்ளும்படியான அப்டேட்டும் வெளியாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் Snap chat போலவே அவதார் உருவங்களை உருவாக்கிக் கொள்ளும் படியான அப்டேட்டும் வர இருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு 8% க்கும் மேல் FD வட்டி விகிதம் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

அதே போல் Delete For everyone செய்துவிட்டால் எந்த செய்தியை Delete For everyone செய்திருக்கிறாரா அந்த செய்தியை சில வினாடிகளுக்குள் தெரிந்துகொள்ளும்படியான அப்டேட்டும் கூடிய விரைவில் வர இருக்கிறது. அதே போல வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒருவர் Delete For everyone செய்துவிட்டால் குரூப் அட்மின் அந்த செய்தியை பார்க்கும்படியான அப்டேட் இன்னும் சில வாரங்களில் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களும் அடுத்தடுத்து அப்டேட்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!