ஷாக்கிங் தகவல்: ட்விட்டரின் Blue Tick பயனர்களுக்கு ஆப்பு வைத்த மஸ்க் – இனி எந்த சலுகையும் இல்ல!!

0
ஷாக்கிங் தகவல்: ட்விட்டரின் Blue Tick பயனர்களுக்கு ஆப்பு வைத்த மஸ்க் - இனி எந்த சலுகையும் இல்ல!!
ஷாக்கிங் தகவல்: ட்விட்டரின் Blue Tick பயனர்களுக்கு ஆப்பு வைத்த மஸ்க் - இனி எந்த சலுகையும் இல்ல!!
ஷாக்கிங் தகவல்: ட்விட்டரின் Blue Tick பயனர்களுக்கு ஆப்பு வைத்த மஸ்க் – இனி எந்த சலுகையும் இல்ல!!

சமீப காலமாக இணைய உலகம் முழுவதையும் கலக்கி வரும் ட்விட்டர் குறித்தான செய்திகளின் வரிசையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ப்ளூ டிக் பயனர்களுக்கு சில சலுகைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் ப்ளூ டிக்:

ட்விட்டர் செயலியில் ப்ளூ டிக் பெறுவது என்பது அனைவருக்கும் எளிதில் கிடைக்காமல் இருக்கிறது. மிகவும் பிரபலமானவர்களுக்கு மட்டுமே இதற்கான அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதற்காக முன்னதாக பயனர்கள் $4.99 அதாவது இந்திய மதிப்பில் ரூ.410 கட்டணமாக செலுத்தப்பட வேண்டியது இருந்தது. ஆனால் கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மாஸ்க் பயனர்களின் தங்களின் ப்ளூ டிக் அடையாளத்தை தக்க வைப்பதற்காக 20 டாலர்கள் செலுத்த வேண்டும் என்று ட்வீட் செய்தார்.

Exams Daily Mobile App Download

மஸ்கின் இந்த ட்வீட்டிற்கு எழுத்தாளர் ஸ்டீபன் கிங், ஒரு ப்ளூ டிக்கிற்காக 20 டாலர் பணமா?நீங்கள் தான் எங்களுக்கு பணம் தரவேண்டும் என்று மஸ்க்கிற்கு ட்வீட் செய்தார். அதற்கு பதிலாக மஸ்க் நிறுவனத்தை நடத்துவதற்கு தங்களுக்கும் பணம் தேவை என்றும், முழுமையாக இதற்காக விளம்பரங்களை நம்பி இருக்க முடியாது என்றும் கூறினார். இதற்கு பதிலாக, மஸ்க் அப்போது 8 டாலர் பணம் என்றால் சரியாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், ப்ளூ டிக் பயனர்களுக்கு இதுவரை விளம்பரங்கள் இல்லாமல் செயலியை அணுகும் வசதி இருந்தது. ஆனால் இனி பயனர்களுக்கு வீடியோக்களுக்கு இடையில் சிறிய விளம்பரங்கள் வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து ட்விட்டரில் செய்யப்படும் மாற்றங்கள் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!