ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிக்கை!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிக்கை!
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிக்கை!
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிக்கை!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் பலர் மின்சார ரயில்களை நம்பியே இருக்கின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 7 ரயில்கள் இன்று (செப் 23 ), செப் 27 மற்றும் 30 ஆகிய 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து:

மெட்ரோ சிட்டியான சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என அது பயணிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை நாம் பார்த்திருப்போம். அதனால் பலர் வேலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர். அதற்கு தகுந்தாற் போல நேரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக செப் 23, 27, 30 ஆகிய தேதிகளில் 7 ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கு இயங்கி வந்த ரயில், சூலூர்பேட்டை – நெல்லூர் இடையே காலை 7.50 மணி, 10 மணிக்கும், மதியம் 3.50 மணிக்கும் இயக்கப்பட்ட ரயில், நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் இயக்கப்பட்ட ரயில், சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், மாலை 6.35 மணிக்கும், இரவு 8.45 மணிக்கும் இயக்கப்பட்ட ரயில், கூடூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்பட்ட ரயில், ஆவடி-சென்ட்ரல் இடையே அதிகாலை 4.25 மணிக்கும், காலை 6.40 மணிக்கும், இயக்கப்பட்ட ரயில், சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 9.15 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும், இயக்கப்பட்ட ரயில், ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் பணியிடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

மேலும் சென்னை சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கும், காலை 10.10 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே இயங்கி வந்த ரயில் பகுதியாக செப். 23, 27, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே காலை 8.35 மணிக்கும், மாலை 3.30 மணிக்கும், இரவு 7.05 மணிக்கும் , எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் எளாவூர் வரை மட்டுமே இயங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே காலை 10 மணிக்கும், மதியம் 1.20 மணிக்கும், மதியம் 3.20 மணிக்கும், இரவு 8.20 மணிக்கும், சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே காலை 11.35 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும், சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு இயங்கி வந்த மின்சார ரயில் சேவை, கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும். அது மட்டுமில்லாமல் சூலூர்பேட்டை-வேளச்சேரி இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்பட்ட ரயில், சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here