1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதிய கொரோனா வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தெர்மல் ஸ்கேனிங் இல்லாமல் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்

நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் 2 ஆயிரமாக பதிவுசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் தெர்மல் ஸ்கேனிங் இல்லாமல் பள்ளி வளாகத்திற்குள் எந்த மாணவரும் அல்லது ஊழியர்களும் அனுமதிக்கப்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

மேலும் அவர்களில் எவருக்கும் கொரோனா பாசிட்டிவ் இருந்தால் கல்வி நிறுவன அதிகாரிகள் தகுந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கான டெல்லி அரசாங்க வழிகாட்டுதல்கள் கூறுகிறது. அதே போல மதிய உணவு மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளின் படி குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்து.

NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை!

மேலும், வகுப்பில் எந்த மாணவரும் கொரோனா அறிகுறிகளுடன் கண்டறியப்பட்டால், உடனடியாக கல்வி நிறுவன அதிபரிடம் தெரிவிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்களின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும், நுழைவு மற்றும் வெளியேறும் நேரத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்றும் இதற்காக தன்னார்வலர்களின் உதவியைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா வழக்குகள் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லி-என்சிஆர் முழுவதும் உள்ள பள்ளிகள் அரசின் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வைரஸ் பரவுவதை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்தவும், வளாகத்தை மூடுவதைத் தவிர்க்கவும் அடிக்கடி சுத்தப்படுத்துதல் உட்பட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தவிர என்சிஆர் நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த மாணவர் அல்லது ஆசிரியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் குறிப்பிட்ட பிரிவுகள் அல்லது வகுப்பறைகளை மூடுமாறு டெல்லி கல்வித்துறை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here