EPS திட்ட பயனர்கள் கவனத்திற்கு – ஓய்வூதிய உச்ச வரம்பு நீக்கம்!

5
EPS திட்ட பயனர்கள் கவனத்திற்கு - ஓய்வூதிய உச்ச வரம்பு நீக்கம்!
EPS திட்ட பயனர்கள் கவனத்திற்கு - ஓய்வூதிய உச்ச வரம்பு நீக்கம்!
EPS திட்ட பயனர்கள் கவனத்திற்கு – ஓய்வூதிய உச்ச வரம்பு நீக்கம்!

இந்தியாவில் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிகபட்ச சம்பளம் மாதம் ரூ. 15,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

EPS திட்டம்:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிஎப் கணக்கு தொடங்கப்படுகிறது. இதில் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில் அவ்வப்போது PF பணத்தை எடுத்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நாம் EPFO வில் உறுப்பினராகும் போது அதே நேரத்தில் EPS உறுப்பினராகிறோம். உங்களின் ஊதியத்தில் 8.33 சதவிகிதத்தில் ஒரு பகுதியானது பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது EPS திட்டத்தின் கீழ் முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச சம்பளம் மாதம் 15,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000 இல் மட்டுமே செய்யப்படும். இந்த வரம்பை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் 15,000 ரூபாய் அதாவது மாத ஓய்வூதியம் ரூ. 1250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியப் பங்களிப்புக்கான அதிகபட்ச மாதச் வரம்பு ரூ.6500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அரசு எச்சரிக்கை அறிவிப்பு

EPS திட்ட பயனாளர் EPFO உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக குறைந்தபட்சம் 10 வருடங்கள் வழக்கமான பணியில் இருப்பது கட்டாயமாகும். இத்திட்டத்தின் கீழ் ஊழியருக்கு 58 வயதாகும் போது ஓய்வூதியம் கிடைக்கும். 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியம் பெற வசதி உள்ளது. இதில் ஊழியர் இறந்தால் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் பணியாளர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணி புரிந்திருந்தால் அது 15 ஆண்டுகளாகவே கணக்கில் கொள்ளப்பட்டு ஓய்வூதியத் தொகை மாதம் 1000 ரூபாய் முதல் அதிகபட்ச ஓய்வூதியம் 7500 ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. வருங்கால வைப்பு நிதி யில் ஓய்வூதியம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது …..இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு 02.08.2022 – 05.08.2022 வரை தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் விரைந்து தீர்வு காண வாய்ப்பு உள்ளது என்பதை யும் , மூன்று நீதி அரசர்கள் விசாரிக்க இருப்பதும் மகிழ்ச்சி இருக்கிறது….
    இதில் ஊடகங்கள் சரியான தகவல்களை தர வேண்டும்…
    ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தை அணுகி உள்ளதை கவனத்தில் கொள்ளும் போது 01.09.2014 க்கு முன்னர் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியத்தை 1000 ரூபாய் என்று உள்ளதை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் .
    இது போன்ற பயனுள்ள கருத்துக்களை ஊடகங்கள் முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ..

  2. வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் CBT meetting அண்மையில் 29.07.22 மற்றும் 30.07.22 இல் புது டில்லியில் நடைபெற்றது.
    இந்த அமைப்பு எடுக்கும் / பரிந்துரைக்கும் அம்சங்கள் குறித்து தொழிலாளர் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….இந்த கூட்டங்கள் சம்பிரதாயமாக இல்லாமல் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு 51. வது தொழிலாளர் துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ள மாண்புமிகு பூபெந்தர் யாதவ் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து நிதி அமைச்சகத்தின் ஆலோசனையை விரைவாக பெற்று மாண்புமிகு பிரதமர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று 75 வது சுதந்திர தின உரையில் வருங்கால வைப்பு நிதியை கொண்டு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று 70 லட்சம் மூத்த குடிமக்கள் சார்பாக வேண்டுகிறேன் ..
    குறைந்த பட்ச ஓய்வூதியம் 1000 ரூபாய் என்று உள்ளதை நினைத்து பார்க்க வேண்டும்..
    இப்போது உள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும் மூத்த குடிமக்களின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கும் அறிவிப்பு செய்தி சுதந்திர தின உரையில் இடம் பெற செய்வது சமூக நீதிக்கும் இயற்கை நியதிக்கும் மதிப்பளிக்கும் வகையில் அமையும்….இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்…..GST மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் கோடிக்கு மேல் வரிவருவாய் உள்ள நிலையில் மூத்த குடிமக்கள் வறுமையில் வாழும் நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்….

  3. முற்றிலும் உண்மை.ரூ1000.00 கீழ் என்போல் ஆயிரகணக்கானோர் உள்ளனர். வ இளங்கோ. சென்னை

  4. Case of retired persons should be done quickly,many have passed away, the same situation will come for them also, don’t forget.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!