EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ரூ.25,000 ஆக உயரும் ஓய்வூதியம்!

0
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - ரூ.25,000 ஆக உயரும் ஓய்வூதியம்!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - ரூ.25,000 ஆக உயரும் ஓய்வூதியம்!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ரூ.25,000 ஆக உயரும் ஓய்வூதியம்!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு EPFO கணக்கின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஓய்வூதிய வரம்பும் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது இதனை நீக்க உள்ளதாக EPFO நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனால் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயரும் என்று கூறப்படுகிறது.

ஓய்வூதியம்

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. அதாவது EPFO நிறுவனத்தின் கீழ் PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்த PF தொகையுடன் அரசு சார்பாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்படும். இந்த தொகைக்கு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இந்த தொகையானது ஊழியர்கள் ஓய்வு பெறும்போது மாதந்தோறும் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் பணியாளர்கள் ஓய்வூதியத் திருத்தத் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்ய வேண்டும். மேலும் ஊழியர் ஒருவர் 20 ஆண்டுகள் பணியில் நிறைவு செய்துள்ளார் எனில் அவருக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய விதிமுறைப்படி, ஊழியர் ஒருவர் எத்தனை வருடங்கள் பணி புரிந்தாலும் அவர்களின் ஓய்வூதியம் அதிகபட்சமாக ரூ.15000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LIC பாலிசிதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!

ஆனால் பழைய விதிமுறைப்படி, 14 ஆண்டுகள் பணி புரிந்தவுடன் ஊழியர் சுமார் ரூ.3000 ஓய்வூதியம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தால், ஊழியர்களின் பென்ஷன் ஃபார்முலாவைக் கணக்கீடுவதன் மூலமாக ஊழியர்களின் ஓய்வூதியத்தில் 300% அதிகரிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஓய்வூதியத்திற்கான அதிகபட்ச வரம்பை (ரூ.15000) நீக்கி, கடைசி அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கீடு செய்யப்பட்டால் அவர்களுக்கு ரூ. 25000 வரை ஓய்வூதியம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!