EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - UAN எண்ணை உருவாக்குவது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - UAN எண்ணை உருவாக்குவது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி?

EPFO வருங்கால வைப்பு நிதி கணக்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் UAN எண் அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், UAN எண்ணை எப்படி உருவாக்குவது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் இணைந்துள்ள அனைவருக்கும் EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியுள்ளது. அதாவது, 12 இலக்க UAN எண்ணை EPFO வருங்கால வைப்பு நிதி கணக்கு உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. ஊழியர்கள் ஒரு வேலையில் இருந்து வேறொரு வேலைக்கு சென்றாலும் கூட அந்த 12 இலக்க UAN எண் மாறாமல் அப்படியே இருக்கும். ஒரு நிறுவனத்தில் 20 மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினாலே அந்த ஊழியருக்கு முதலாளி UAN எண்ணை உருவாக்கி கொடுக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவே UAN எண்ணை உருவாக்கி கொள்ளலாம்.

விவாகரத்து ஆன கையோடு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய கோபி – அடுத்து வரும் ட்விஸ்ட்!

EPFO உறுப்பினர்கள் இந்த UAN எண்ணை பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதிக் கணக்கை நிர்வகித்துக் கொள்ளலாம். மேலும், இந்த UAN எண் மூலமாகவே EPF இருப்பு தொகை, PF கடன் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் முதலான அனைத்து பணிகளையும் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக UAN எண்ணை உருவாக்க பணியாளரின் அடையாள சான்று, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள், நிரந்தர கணக்கு எண் (PAN), ஆதார் மற்றும் பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) அட்டை ஆகிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

தற்போது எப்படி ஆன்லைன் மூலமாகவே UAN எண்ணை உருவாக்குவது என்பதை பார்க்கலாம். முதலில், EPFO ன் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று UAN ஐச் செயல்படுத்து என்பதை கிளிக் செய்யவும். பின்பு, Get Authorization Pin என்பதை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஒப்புக்கொள்கிறேன் என்பதை கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணிற்கு பெறப்பட்டுள்ள OTP எண்ணை பதிவு செய்யவும். இதற்கு பிறகு UAN ஐச் செயல்படுத்து என்பதை கிளிக் செய்துவிட்டால் UAN எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!